'அப்படி' மட்டும் நடந்துச்சுன்னா... 'அணு' ஆயுத தாக்குதலுக்கு 'முதல்' டார்கெட் 'நீங்க' தான்...! எங்க கிட்டேயே 'பூச்சாண்டி' காட்டுறீங்களா...? - பகிரங்கமாக 'மிரட்டல்' விடுத்த நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா(America), ஆஸ்திரேலியா (Australia) மற்றும் பிரிட்டன் (UK) ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கஸ் பாதுகாப்பு கூட்டமைப்பை (AUKUS) அறிவித்த நிலையில் சீனா (China) பகிரங்க கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் காரணமாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஒன்றிணைந்து ஆக்கஸ் என்ற பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கியது.

இந்த உடன்படிக்கையில் முதல் முயற்சியாக அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை குறித்து அறிந்த சீனா அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை, ஆஸ்திரேலியா வாங்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் சீன அரசு ஊடகமான தி குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் இந்த கூட்டணி பிராந்திய அமைதி, நிலைத்தன்மைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல், அணு ஆயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கினால் ஆஸ்திரேலியா வாங்கினால், கண்டிப்பாக அணு ஆயுத தாக்குதலுக்கு  ஆஸ்திரேலியா தான் முதல் இலக்கு' கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்