3000 வருஷத்துக்கு முந்துன கோவிலில் இருந்த விஷயம்.. அப்போவே டைம் டிராவலா?.. ஆராய்ச்சியாளர்களை திகைக்க வச்ச சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எகிப்தில் பழங்கால கோவில் ஒன்றில் ஹெலிகாப்டர் போன்ற சின்னங்களை மக்கள் பயன்படுத்தியிருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. இது, ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.. 12,000 அடி உயரத்தில் நடந்த பரபரப்பு.. கண்ணீர்விட்ட விமான பணிப்பெண்.. கடைசியில் நெகிழ்ச்சி வீடியோ..!

பழங்கால எகிப்து நாகரிகம் குறித்து பல்வேறுகட்ட ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. முக்கியமாக அவர்களது எழுத்துமுறை மூலமாக, அன்றைய காலத்தில் மக்களிடத்தில் இருந்த நம்பிக்கைகள் மற்றும் அவர்களது வானவியல் பற்றிய அறிவு குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். பொதுவாக எகிப்தில் பண்டைய காலத்தை சேர்ந்த கல்லறைகள் துவங்கி சாதாரண மண்பானைகள் வரை பழங்கால வரலாற்றை மீட்டெடுக்கும் பொக்கிஷங்களாக பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில், பண்டைய எகிப்தை சேர்ந்த கோவில் ஒன்றில் ஆய்வில் ஈடுபட்டுவந்த ஆராய்ச்சியாளர்கள், சுவற்றில் இருந்த ஒரு சின்னத்தை பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயுள்ளனர். காரணம், ஹைரோகிளிஃப்ஸ் எனப்படும் எழுத்துகளுக்கு இடையே ஹெலிகாப்டர் போன்ற சின்னம் ஒன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் அங்கு வாழ்ந்த மக்கள், கால பயணம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என பலரும் விவாதிக்க துவங்கியுள்ளனர். எகிப்தின் அபிடோஸ் பகுதியில் உள்ள Seti I's கோவிலில் தான் இந்த எழுத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இது சுமார் 3000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த கோவிலில் உள்ள எழுத்துக்கள் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த அரசரின் காலத்தில் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக இரண்டாம் ராமேஸஸ் காலத்தில் இந்த சிற்பங்கள் பிளாஸ்டரால் நிரப்பட்டிருக்கின்றன. மேலும் ராமேஸஸ், எகிப்தை காக்கும் மற்றும் பிற நாடுகளை வீழ்த்தியவர் எனும் அடைமொழியுடன் பல்வேறு வேலைப்பாடுகளும் இங்கே நிகழ்ந்திருக்கின்றன.

இதுகுறித்த தகவல்கள் வெளிவந்த உடனேயே கால பயணம் குறித்து பழங்கால எகிப்து மக்களுக்கு விழிப்புணர்வு இருந்திருக்கிறது என சமூக வலை தளங்களில் விவாதம் நடைபெற துவங்கின. ஆனால், ஆராய்ச்சியாளர்களின் பதிலோ வேறு விதமாய் இருக்கிறது. அதாவது, இத்தகைய சின்னங்களை எழுத்துக்களாக பண்டைய எகிப்தியர்கள் உபயோகித்திருப்பது நவீன விமானம் குறித்த பார்வை அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை காட்டுவதாக தெரிவித்திருக்கின்றனர். பழங்கால எகிப்து குறித்த ஆராய்ச்சிகள் எப்போதும் உலக அளவில் சலசலப்பை ஏற்படுத்தும் நிலையில், இந்த முறையும் அது நடந்துவருகிறது.

Also Read | புதுசா வாங்குன பைக்-கு மாலையை போடுங்க.. டக்குன்னு கணவர் செஞ்ச காரியம்.. எல்லோரும் சிரிச்சிட்டாங்க.. Cute வீடியோ..!

ANCIENT EGYPTIAN HELICOPTER, TIME TRAVEL, CARVING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்