துபாயில் திறக்கப்பட்ட இந்து கோவில்.. வீடியோ பாத்துட்டு ஆனந்த் மஹிந்திரா சொன்ன விஷயம்.. வைரல்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

Advertising
>
Advertising

அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.

இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.

இந்த நிலையில், தற்போது துபாயில் திறக்கப்பட்டுள்ள ஹிந்து கோவில் குறித்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ மற்றும் அதன் கேப்ஷன், இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டு வந்த இந்து கோவில் தற்போது பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை 2019 ஆம் ஆண்டு அமீரக அரசு ஒதுக்கியது. இதனையடுத்து கொரோனா காலத்திலும் இந்த கோவில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. சுமார் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தை துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் திறந்து வைத்திருக்கிறார்.

இந்த கோவிலின் உள்ளே சிவன், கிருஷ்ணா, கணபதி, முருகன், மகாலட்சுமி உள்ளிட்ட 16 கடவுள்களுக்கு தனி தனியாக தலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், உள்ளே பிரம்மாண்ட ஹால் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலுக்கு அருகிலேயே 9 கிறிஸ்தவ தேவாலயங்களும், குருத்வாராவும் அமைந்திருக்கிறது.

துபாயில் தற்போது திறக்கப்பட்டுள்ள இந்து கோவிலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகியும் வந்தது. தொடர்ந்து, இது தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "இந்த அற்புதமான கோவில் இன்று திறக்கப்பட்டது என நான் நம்புகிறேன். சுப நேரம். அடுத்த முறை துபாய் பயணத்தின் போது நிச்சயம் சென்று பார்க்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 

DUBAI HINDU TEMPLE, ANAND MAHINDRA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்