‘ஈபிள் டவரை விட பெரிசு’.. பூமியை நோக்கி வேகமாக வரும் சிறுகோள். நாசா எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பூமியை நோக்கி மிகப்பெரிய சிறுகோள் ஒன்று வந்து கொண்டிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | வானத்தில் திடீரென விழுந்த மர்ம பொருள்.. “ஒருவேளை இது அதுவா இருக்குமோ?”.. பீதியில் கிராம மக்கள்..!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ராட்சத சிறுகோள் ஒன்று வரும் மே 16-ம் தேதி பூமியை நெருங்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் 1608 அடி அகலம் கொண்டது என்றும், இது நியூயார்க்கின் சின்னம் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தினை போல 1,454 அடி உயரத்தில் உள்ளது என்றும், ஈபிள் கோபுரம் மற்றும் லிபர்ட்டி சிலையை விட பெரியது என்று தெரிவித்துள்ளது.

ஒருவேளை இந்த சிறுகோள் பூமியை தாக்கினால் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 2.5 மில்லியன் மைல் தொலைவில் இந்த சிறுகோள் பூமியை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சிறுகோள் பூமியை நெருங்குவது முதல் முறையல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே 2020-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் 1.7 மில்லியன் மைல் தொலைவில் இந்த சிறுகோள் சென்றது. சூரியனைச் சுற்றி வரும்போது இந்த விண்வெளிப் பாறை, ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒரு முறை பூமியைக் கடந்து செல்கிறது என நாசா தெரிவித்துள்ளது.

அடுத்த முறை இந்த சிறுகோள் மே 2024-ம் ஆண்டு சுமார் 6.9 மில்லியன் மைல்கள் தூரத்தில் பூமியை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 4.65 மில்லியன் மைல்களுக்குள் வந்தால் அது ஆபத்தானதாக விண்வெளி நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளன.

சிறுகோள்கள், விண்வெளி குப்பைகள், ஒரு கிரகத்தின் எச்சங்கள் போன்றவை. இது விண்வெளியில் சுழன்று கொண்டே இருக்கும். ஆனால், சில பெரிய விண்வெளி பாறைகள் பூமிக்கு ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

NASA, NASA SPACE SCIENTISTS, ASTEROID, EIFFEL TOWER, EARTH, சிறுகோள், விண்வெளி விஞ்ஞானிகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்