'கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து'... 'அடுத்த நொடி ஆப்பிள் வாட்ச் செய்த மேஜிக்'... வியப்பில் ஆழ்த்தியுள்ள சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விபத்தில் சிக்கிய இளைஞரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் முகமது ஃபிட்ரி. இவர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது வேன் ஒன்று மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த வேகத்தில் மயக்கமடைந்து தனது சுயநினைவை முகமது இழந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் முகமது தனது கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. முகமது விழுந்த வேகத்தில் ஆப்பிள் வாட்சில் இருந்து அவசர உதவி எண்ணிற்குத் தகவல் சென்றுள்ளது. மேலும் அவர் இருக்கும் இடத்தின் லொகேஷனையும் அனுப்பியுள்ளது. இதையடுத்து அவர் விபத்து நடந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆப்பிள் வாட்சில் ஆபத்துக் காலங்களில் அவசர உதவிப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கும் SOS வசதி உள்ளது. ஒரு வேளை ஆப்பிள் வாட்சை அணிந்திருப்பவருக்கு  எதாவது பிரச்சனை என்றால் அவர் வாட்சில்  உள்ள SOS பட்டனை அழுத்தினால் உதவி எண்களுக்குத் தகவலும், குறிப்பிட்ட லொகேஷனும் செல்லும். அதேநேரத்தில் பட்டனை அழுத்தாமலே அதிர்வுகளால் தூண்டப்பட்டும் அவசர எண்ணிற்குத் தகவல் செல்லும்.

அந்த வகையில் தான் தற்போது முகமது ஃபிட்ரி விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்