சண்டை செய்ய 'நாங்க' ரெடி...! 'என்ன நடந்தாலும் அடிபணிய மாட்டேன்...' - தாலிபான்களுக்கு எதிராக முதல் 'கொரில்லா' குரல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்களிடம் சரணடையமாட்டேன் என்றும் அவர்களுக்கு எதிராக புதிய போருக்கு தயாராகவே உள்ளோம் என்று ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே கூறியுள்ளார்.

அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,''நான் எந்தச் சூழ்நிலையிலும் தாலிபான் தீவிரவாதிகளுக்குத் தலைவணங்க போவதில்லை. எனது தலைவர் அகமது ஷா மசூதின் மாண்புக்கும் எப்போதும் நான் துரோகம் செய்யமாட்டேன். என்னுடைய பேச்சை நம்பிய லட்சக்கணக்கான மக்களை ஏமாற்ற மாட்டேன்.'' என்று கூறியுள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு எதிராக முதல் கொரில்லா இயக்கக் குரல் ஒலித்துள்ளது.

பாஞ்ஷிர் பகுதி போராளிகளின் கோட்டை ஆகும். 1990-களில் தாலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பாஞ்ஷிரை மட்டும் அவர்கள் வசமாக்க மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள். சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அளவிற்கு அகமது ஷா மசூத் வைத்துள்ளார். சலேன் அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர் ஆவார்.

1996-ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பி சென்றார். தாலிபான்கள் அவரது சகோதரியைக் கைது செய்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்தனர். 

மேலும், பாகிஸ்தான் ராணுவம் தாலிபான் படைகளுக்கு ஆதரவு அளிப்பதை அவர்தான் உறுதி செய்தார். 2010-ஆம் ஆண்டு அவருடைய பதவியை இழந்தார். பின்னர் 2018-ஆம் ஆண்டு அவர் அஷ்ரப் கனியுடன் சமரசம் பேசி உள்துறை அமைச்சரானார். அதன்பிறகு, துணை அதிபர் பதவிக்கு உயர்ந்தார்.

சாலேவை கொலை செய்ய வேண்டும் என தாலிபான்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். கடந்த 2020 செப்டம்பர் மாதம் அவர் வந்துக் கொண்டிருக்கும் வழியில் தாலிபான்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். சாலே இறந்து விட்டார் என தாலிபான்கள் நினைத்துக் கொண்டிருந்த ஒரு சில மணி நேரத்திலேயே அவர் காணொலியில் தோன்றி ''தாலிபான்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்தார். 

இந்த நிலையில், மீண்டும் தாலிபான்களுக்கு எதிராக அவர் குரல் எழுப்பியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்