உலகமே 'அண்ணாந்து' பார்த்த என் புள்ளைய... 'இனிமேல் நான் பார்க்க முடியாது இல்ல...' - சுக்குநூறாக உடைந்துப்போன 'அம்மா'வின் இதயம்...!...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

'அமெரிக்காவின் மிக உயர்ந்த மனிதர்' என்று உலக கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த இகோர் வோவ்கோவின்ஸ்கி என்பவர் 7 அடி 8 அங்குல உயரம் (234.5 செமீ) கொண்டவர். தற்போது 38 வயதாகும் இவரின் அசாதாரணமான உயரத்திற்காக, தன்னுடைய 27-வது வயதில் 'அமெரிக்காவின் உயர்ந்த மனிதர்' என்று உலக கின்னஸ் சாதனை நூலில் இடம்பிடித்து சாதனை புரிந்தார். இகோர் வோவ்கோவின்ஸ்கி, சில வருடங்களாக இதய நோய் ஏற்பட்டது. மருத்துவரிடம் பரிசோதனை செய்து முறையாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

உலகமே 'அண்ணாந்து' பார்த்த என் புள்ளைய... 'இனிமேல் நான் பார்க்க முடியாது இல்ல...' - சுக்குநூறாக உடைந்துப்போன 'அம்மா'வின் இதயம்...!...!



இந்நிலையில் இகோர் வோவ்கோவின்ஸ்கி கடந்த 20-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயினும், சிறிது நேரத்திலேயே சிகிச்சைப் பலனின்றி அவர் மரணமடைந்தார்.America's Guinness Record tallest man dies heart attack

உலகமே அண்ணாந்து பார்க்கும் தன் மகனை இனி பார்க்க முடியாத தாய், தன் மகனின் மரணச் செய்தியை அவரது அம்மா ஸ்வெட்லானா ஃபேஸ்புக் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்