மீனுக்கு சவப்பெட்டி ... 'அமெரிக்க' மாணவர்கள் 'இறுதி அஞ்சலி'... 'டின்னர்' என்னவோ 'ஃபிஷ் ஃபிரைதான்'... 'மசாலா' கொஞ்சம் தூக்கலா...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் லூம்பா என்ற வளர்ப்பு மீனுக்கு மனிதர்களுக்கு செய்வது போன்று இறுதிச்சடங்கு செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் லூம்பா என்ற பெயர் கொண்ட வளர்ப்பு மீன் உயிரிழந்தது. அதற்கு முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்த மாணவர்கள் முடிவு செய்தனர். பிறகு இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர். இதற்காக பேனா வைக்கும் பெட்டியை சவப்பெட்டி போன்று அலங்காரம் செய்து அதில் மீனை வைத்து எடுத்து வந்தனர். மாணவர்கள் பெரும்பாலும் வழக்கமாக மனிதர்களின் இறுதிச் சடங்குக்கு செல்வது போன்று கருப்பு உடை அணிந்திருந்தனர்.
பின்னர் மீன் வைக்கப்பட்ட சவப்பெட்டியை ஒரு மேடை மீது வைத்து அதன் மீது குச்சிகளை அடுக்குகின்றனர். தொடர்ந்து அதன் மீது எரிபொருள் ஒன்றை ஊற்றி ஒரு மாணவர் தீயை பற்ற வைக்கிறார்.
மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த மீனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த சில நெட்டிசன்கள் 'ரிப்' என பதிவிட்டு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மீனும் ஒரு உயிர்தான் என பதிவிட்டு தங்கள் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவுக்கு' எயிட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்து... என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் 'சீன அரசு'...
- ‘கல்யாணத்துக்கு வரவங்க கட்டாயம் இத கொடுக்கணும்’.. மெசேஜ் அனுப்பிய மணப்பெண்.. மிரண்டுபோன கல்லூரி மாணவி..!
- 'ரோபோவுக்கு' கூட உயிர் கொடுக்க முடியுமா? இதோ 'விஞ்ஞானிகள்' சாதித்து விட்டனர்... 'ஸ்டெம் செல்' தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சி...
- பச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி... உரிமையாளர் 'அதிர்ச்சி'... 'கதிர்வீச்சு' பாதிப்பில்லை என ஆய்வாளர்கள் விளக்கம்...
- 2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?...
- மீனோட எடை '158 கிலோ'... மலைக்க வைக்கும் 'சைஸ்'... ஒரு ஊரே உக்காந்து சாப்பிடலாம்...
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- எங்களுக்கும் 'திருப்பி அடிக்கத்' தெரியும்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த 'அதிர்ச்சி வைத்தியம்'...
- ‘176 பேருடன்’ கிளம்பிய ‘விமானம்’... புறப்பட்ட ‘சில நிமிடங்களிலேயே’ நடந்த ‘பயங்கர’ விபத்தால் ‘பரபரப்பு’...
- ட்ரெண்டிங்கில் 'World War 3' ஹேஷ்டேக்.... பீதியைக் கிளப்பும் 'அமெரிக்கா'... கதிகலங்கி போயுள்ள உலக நாடுகள்...