'அடிச்சாரு பாருயா முதல் பால்யே சிக்ஸர்'... 'ஜோ பைடன் போடப்போகும் முதல் கையெழுத்து'... குதூகலத்தில் இந்திய ஐடி பொறியாளர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்ற நிலையில், தனது முதல் வேலையாக 15 முக்கிய உத்தரவுகளில் அவர் கையொப்பமிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த 15 உத்தரவுகளில், குறிப்பிட்ட முஸ்லீம் நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம், அதிகமான இந்தியர்களுக்கு கிரீன் கார்டு, ஐடி துறையில் அதிகமான விசா வளங்கள், 100 நாட்கள் கட்டாய முகக்கவசம் என பல அடங்கியுள்ளது.

இதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் வெளிநாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா, கிரீன் கார்டு வழங்குதல் போன்றவையாகும். இந்த மசோதாவில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், கடந்த 8 ஆண்டுகளாக குடியுரிமை இல்லாமல் இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கும்.

அது மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்கும். முக்கியமாக, மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் டிரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிதியுதவியை உடனடியாக ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்