குழந்தைகளுக்கு அழகான பேர் வைக்குறதுதான் வேல… லட்சக்கணக்கில் சம்பாதித்து அசத்தும் பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தொழில்முறையாக இந்த வேலையை செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து அசத்தி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "1000 கிமீ டிரைவிங் செஞ்சு வந்திருக்கோம்".. வைரலான RCB ரசிகரின் போஸ்டர்.. தினேஷ் கார்த்திக் கொடுத்த செம்ம ரிப்ளை..!

பெயர் சொல்லும் இணையதளங்கள்…

பிறந்த குழந்தைகளுக்கு எந்த குழப்பமும் இல்லாமல் பெற்றோர்கள் பெயர் வைத்து  மகிழ்ந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது எல்லாம் நியுமராலஜி படி பெயர் வைத்தல், அழகான உச்சரிப்பு, வித்தியாசமான பெயர் உள்ளிட்ட பல விஷயங்களைக் கணக்கில் கொண்டே பெயர்கள் வைக்கப்படுகின்றன. இதற்கென்றே பல ஜோதிடர்களும் இணையதளங்களும் தோன்றி லட்சக்கணக்கான பெயர்களை நம்முன் காட்டுகின்றன. ஆனால் அதில் எந்த பெயரைத் தேர்வு செய்வது என்பது பல பெற்றோர்களுக்கும் குழப்பமான ஒன்றாகவே உள்ளது.

பெயர் தேர்வு செய்யும் நிபுணர்கள்…

அதைத் தீர்ப்பதற்காகவே இப்போது குழந்தைகளுக்கு அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கும் பெயர்களை தேர்வு செய்து தர நிறுவனங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்க பெண்ணான ’டெய்லர் ஏ ஹம்ப்ரே’ என்பவர் இதற்காக லட்சக்கணக்கில் சம்பளமும் பெற்று வருகிறாராம். இவரைப் பற்றி தகவல் சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவின் நியு யார்க் நகரத்தில் வசிக்கும் ஹம்ப்ரே குழந்தைகளுக்கு ஒரு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பதற்காக பெற்றோர்களிடம் இருந்து  குறைந்தபட்சமாக $1,500 (ரூ. 1.14 லட்சம்) கட்டணமாக பெறுகிறார். இதில் சில பணக்கார பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளின் பெயர்கள் மிகவும் பிடித்தமானதாக அமைந்துவிட்டால் 10000 டாலர் வரை தாங்களாகவே கொடுக்கிறார்களாம். இது இந்திய மதிப்பில் 7 லட்ச ரூபாயைத் தாண்டுகிறது. ஹாம்ப்ரே இதுவரை இதுபோல 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பெயர்களை தேர்வு செய்து கொடுத்துள்ளாராம்.

பல திட்டங்கள்…

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்காக பெற்றோர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு பெயரை இவர் தேர்வு செய்து தருவாராம். இவரிடம் 1500 டாலர் முதல் 10000 டாலர் வரையிலான திட்டங்கள் இதற்காக உள்ளதாம். இவரைப் பற்றிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Also Read | IPL 2022: “நாங்க நல்லாதான் ஆரம்பிச்சோம்” “டி 20 போட்டியோட அழகே அதுதான்” – தோனி போல கூலாக பேசிய ஜடேஜா!

AMERICAN BABY, EARNING, அமெரிக்கா பெண்

மற்ற செய்திகள்