"கர்ப்பம் இல்ல".. ஆனாலும் பிரசவ வலியை அனுபவித்த இளம்பெண்.. திகைக்க வைத்த காரணம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த 26 வயதான பெண் தான் ஹோலி ஸ்மால்வுட். இந்த பெண் சமீபத்தில் மோசமான நிலைக்கும் தள்ளபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

Advertising
>
Advertising

Also Read | "தனிமையில் செல்லும் ஜோடிகள் தான் இலக்கு".. பெண்களை ரகசியமா கண்காணித்து வந்த நபர்... திடுக்கிடும் பின்னணி!!

இதற்கான காரணம் தான் தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, மகப்பேறு மருத்துவரிடம் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள சென்ற ஸ்மால்வுட்டிற்கு காப்பர் IUD பொருத்தப்படுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. வலி அதிகமாக இருக்கும் என சொல்லியே சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தன்னால் வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்றும் மருத்துவரிடம் ஸ்மால்வுட் கூறி உள்ளார்.

இருப்பினும் IUD பொருத்தியும் ஒரு வித்தியாசமான வலியை உணர்வதாக மருத்துவமரிடம் கூறி இருக்கிறார் ஸ்மால்வுட். நேரம் ஆக ஆக, அவரால் வலியை தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல் மயக்கம் அடைந்த ஸ்மால்வுட் சில நிமிடங்கள் கழித்து எழுந்துள்ளார். அப்போது அவரது கை, கால் உள்ளிட்ட உறுப்புகள் உணர்ச்சிகளை இழந்துள்ள சூழலில் அதீத வியர்வையும் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், உடல் தசைகள் இழுக்க ஆரம்பித்துள்ள சூழலில், IUD சிகிச்சையில் தவறு நடந்துள்ளதை உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக பொருத்தப்பட்ட காப்பர் IUD-ஐ வெளியேற்ற வேண்டும் என்றும் அப்போது தான் ஸ்மால்வுட் பிழைக்க முடியும் என்றும் கூறிவிட்டனர்.

அதாவது நரம்பின் மீது IUD பொருத்தப்பட்டுள்ளதால் அதனை வெளியேற்ற பிரசவத்திற்கு கொடுக்க வேண்டிய முயற்சியை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுக்க முடியாது என்றும் கூறிவிட்டனர். ஒரு வழியாக IUD-ஐ வெளியேற்ற ஸ்மால்வுட் மீண்டும் பிரசவ வலியை அனுபவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பதிலாக செய்யப்படும் மற்றொரு சிகிச்சை தான் IUD. அதாவது கருப்பை கருத்தடை சாதனம் ஒன்று பிறப்புறுப்பின் வழியாக கர்ப்பப்பை உள்ளே பொருத்தப்படும். இது காப்பர் வடிவில் அல்லது ஹார்மோனல் வடிவிலோ இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | வளர்ந்துகொண்டே இருக்கும் அதிசய ஆசாமி... உலகின் உயரமான மனிதரா? வைரல் பின்னணி..

AMERICA, WOMAN, LABOUR PAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்