அவர 'நாடு கடத்தணும்'னா பண்ணிக்கோங்க...! உலகத்தையே கண்ணுல 'விரல' விட்டு ஆட்டுன ஆளு...! - யாருனு தெரியுதா...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை திருடி வெப்சைட்டில் பதிவிட்ட அசாஞ்சே பல போராட்டங்கள் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertising
>
Advertising

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே என்பவர் அமெரிக்கா போன்ற உலக நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை 'ஹேக்' செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரை கைது செய்ய அமெரிக்கா பல முயற்சிகளை எடுத்தது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்ககோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது. அதோடு, அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை திருடிய குற்றத்திற்காக ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவுள்ளதாக அமெரிக்கா கூறியது.

ஆனால் ஜூலியன் அசாஞ்சே தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என்று கூறி லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்  அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும், மன ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்டு சிறையில் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறி அவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்தது.

கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்கா லண்டன் மேல்முறையீட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் நேற்று வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு கோர்ட்டு அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதிக்க முடியாது என கூறி கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான அனைத்து பணிகளையும் அமெரிக்கா நடத்திவருகிறது.

AMERICA, ASSANGE, UK, அசாஞ்சே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்