"33 வருஷம் ஆயிடுச்சு".. கொலை குற்றவாளிய கண்டுபிடிக்க முடியாம திணறிய போலீஸ்.. கொலை வழக்கை திருப்பி போட்ட சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

30  வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலைகள் தொடர்பாக இத்தனை நாட்கள் கழித்து துப்பு துலங்கியுள்ள சம்பவம், வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மூழ்கிப்போன டைட்டானிக் கப்பலை பார்க்கணும்.. 30 வருஷமா காத்திருந்த பெண்.. படிச்சது, சம்பாதிச்சது எல்லாம் அதுக்காக தான்.. மிரளவைக்கும் பின்னணி..!

அமெரிக்காவின் Vermont மாநிலத்தில் உள்ள Danby என்னும் நகரத்தில் வாழ்ந்து வந்தவர் ஜார்ஜ் பீகாக் (George Peacock). கடந்த 1989 ஆம் ஆண்டு, இவருக்கு 76 வயதாக இருந்தது. மேலும், அவரது மனைவியான கேத்தரினுக்கு அப்போது 73 வயதாக இருந்துள்ளது.

ஜார்ஜ் மற்றும் கேத்தரின் ஆகியோர் அவர்களின் வீட்டில் இருந்த போது, கடந்த 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர்.

ஆனால், அதே வேளையில் ஜார்ஜ் மற்றும் கேத்தரின் தங்கி இருந்த வீட்டில் அத்துமீறி ஒருவர் நுழைந்ததாகவோ அல்லது கதவு உடைக்கப்பட்டதாகவோ அல்லது பொருட்கள் திருடு போனவை உள்ளிட்ட எந்தவித தடயங்கள் மற்றும் சாட்சியங்களும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், உயிரிழந்த தம்பதியரின் இரண்டு மகள்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்ட மைக்கேல் அந்தோணி லூயிஸ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் உருவானதாக தகவல்கள் கூறுகின்றது. அந்த சமயத்தில் கிடைத்த சூழ்நிலை ஆதாரங்கள், இந்த இரட்டை கொலையில் மைக்கேலுக்கு தொடர்பு இருப்பதாகவும் காட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும், மைக்கேல் அந்தோணி தான் கொலையாளி என்பதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால், இந்த வழக்கிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகள் கழித்து ஜார்ஜ் மற்றும் கேத்தரின் கொலை குற்றவாளியை தீர்மானிக்கும் வழி ஒன்று கிடைத்துள்ளது.

1989 ஆம் ஆண்டு கொலை நடந்த சமயத்தில் மைக்கேலின் காரில் இருந்து கிடைத்த ஒரு துளி ரத்தத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு டிஎன்ஏ சோதனை மேற்கொண்டு பார்த்துள்ளனர். அப்போது அது ஜார்ஜ்ஜின் ரத்தம் என்பது உறுதியாகி உள்ளது. இதன் பின்னர், மைக்கேல் அந்தோணியை சமீபத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

1989 ஆம் ஆண்டு இதே ரத்த துளியை போலீசார் சோதனை செய்தும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. தற்போது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, டிஎன்ஏ டெஸ்ட் மூலம் மைக்கேல் தான் கொலையாளி என்பது உறுதியாகி உள்ளது. ஆனாலும், உண்மை தெரிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் கொலையாளியான மைக்கேல் அந்தோணியை கைது செய்ததற்கான காரணம் பற்றிய உறுதியான தகவல் இல்லை என தெரிகிறது.

ஒரே ஒரு ரத்தத் துளி மூலம், 30 ஆண்டு கால மர்மம்  வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு".. விருந்துக்கு போன இடத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்!!

AMERICA, MYSTERY CASE, UNSOLVED MYSTERY CASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்