பிரபல அமெரிக்க ராப் பாடகருக்கு நேர்ந்த துயரம்!!.. துப்பாக்கியுடன் வந்த நபரால் பதைபதைப்பு சம்பவம்.!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நகையை கொள்ளையடிக்க வந்த நபர் மூலம் பிரபல ராப் பாடகருக்கு நேர்ந்துள்ள சம்பவம், உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "என் வீட்டுக்கு சாப்பிட வருவீங்களா??"... ஆட்டோ ஓட்டுநர் வைத்த Request.. நெகிழ வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்!!

அமெரிக்க ராப் இசை உலகில் மிகவும் அறியப்படும் நபர்களில் ஒருவர் PnB Rock.

"Catch These Vibes" & "TrapStar Turnt PopStar" உள்ளிட்ட ராக் உருவாக்கிய பல பாடல்கள் உலக அளவில் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பெற்று பாடல்களாகும்.

அப்படி ஒரு சூழ்நிலையில் மிகவும் எதிர்பாராத நேரத்தில் கடும் துயரம் ஒன்று அவருக்கு நேர்ந்துள்ளது. தன்னுடைய காதலியுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள உணவு விடுதிக்கு சமீபத்தில் PnB ராக் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த நபர் ஒருவர் ராக்கின் நகைகள் மற்றும் ஆடம்பர பொருட்களை கேட்டு துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கே இருந்த மர்ம நபருக்கும், ராக்கிற்கும் இடையே மோதல் உருவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் அடிதடி முற்றவே தன் கையில் உள்ள துப்பாக்கியால் அந்த மர்ம நபர் ராக்கை பார்த்து சுட்டுள்ளார். இதனால் உடனடியாக ராக்கை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்வதற்கு முன்பாக ராக் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி பேசி இருந்த PnB ராக்கின் காதலி, அந்த நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து காரில் தப்பித்து சென்று விட்டதாகவும் கூறி உள்ளார். ராக் அணிந்திருந்த நகைகள் காரணமாகவே இந்த கொலை நடந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தாங்கள் உணவு விடுதியில் இருக்கும் புகைப்படத்தை PnB ராக் மற்றும் அவரது காதலி தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்ததால் அதனை கொண்டு தான் நேரடியாக அங்கு வந்து கொள்ளையடிக்கும் முயற்சிகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

ராக்கின் மறைவு, இசை வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது. ராப் இசை பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் ராக் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | கடலுக்கு அடியில் மர்ம உயிரினம்.. "என்னன்னு தெரியாம ஒட்டுமொத்த டீமும் கெறங்கி போய் கெடக்கு"..

AMERICA RAPPER, PNB ROCK, AMERICA RAPPER PNB ROCK, PNB ROCK PASSED AWAY, ROBBERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்