"இனி உடலை எரிக்கவோ, புதைக்கவோ வேண்டாம்".. உரமாக மாறும் மனித உடல்கள்.. ஒப்புதல் அளித்த நகரம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக உலகெங்கிலும் மனிதர் ஒருவர் உயிரிழக்கும் போது, அவர்களின் உடலை புதைக்கவோ அல்லது எரிக்கவோ என சமுதாய சடங்குகளுக்கு உட்பட்டு இறுதி சடங்குகள் செய்வார்கள்.

Advertising
>
Advertising

Also Read | "பாஜகவில் இருந்து விலகுகிறேன்".. பரபரப்பு முடிவை எடுத்த காயத்ரி ரகுராம்!!..

அப்படி ஒரு சூழலில், அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் இறந்த மனிதனை இயற்கை உரமாக மாற்றும் புதிய நடைமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இறந்த மனிதனை உரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இருந்த போதிலும் இதனை எந்த ஒரு உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. வருடங்கள் செல்ல செல்ல உலக வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றின் தாக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் காரணமாக சில நாடுகள் இந்த முடிவுக்கு மாறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்படி அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் முதன்முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறந்த மனிதனை மண்ணாக மாற்றும் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்தது. இந்த நடைமுறைப்படி கட்டையால் செய்யப்பட்ட கண்டெய்னர் ஒன்று இருக்கும். அதில் இறந்து போன மனிதனின் உடலை அதற்குள் வைத்து விடுவார்கள். மேலும் அதற்குள் மரத்துகள்கள், செடி, கொடி ஆகியவற்றினால் நிரப்பி மூடி விடுவார்கள். இதனால் பாக்டீரியாக்கள் விரைவிலேயே அந்த உடலை கெட்டுப் போகச் செய்து விடும் என செயல்முறை விளக்கங்கள் குறிப்பிடுகிறது.

மேலும் சாதாரண மண்ணை விட பல மடங்கு உரம் மிக்கதாக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வாஷிங்டன் நகரை தொடர்ந்து அமெரிக்காவில் அடுத்தடுத்த ஐந்து நகரங்கள் இந்த நடைமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. தற்போது இந்த வரிசையில் நியூயார்க்கும் இணைந்துள்ள நிலையில், இனி எதிர்காலத்தில் பல நாடுகள் மற்றும் நகரங்கள் இந்த நடைமுறைக்கு மாறும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

Also Read | இறந்த தந்தை சொன்னதை கேட்டு லாட்டரி வாங்கிய மகன்??.. மிரண்டு போக வைத்த தகவல்!!.. நடந்தது என்ன?

AMERICA, NEW YORK, HUMAN BODY COMPOSTING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்