கடந்த 'ஆறு போர்களில்' இறந்தவர்களைவிட... 'கொரோனாவால்' அதிகமானோரை 'பறிகொடுத்த அமெரிக்கா...' 'பலி' எண்ணிக்கை '14 ஆயிரத்தைக்' கடந்தது...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கடந்த ஆறு போர்களில் ஏற்பட்ட உயிரிழப்பை விட, கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அங்கு 4 லட்சத்து 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அங்கு வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா கடந்த 1775ம் ஆண்டுக்கு பிறகு எதிர்கொண்ட 6 போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க புரட்சி, 1812 ஆம் ஆண்டுப் போர், இந்தியப் போர்கள், மெக்ஸிகோ போர், ஸ்பானிய - அமெரிக்கப் போர் மற்றும் வளைகுடாப் போர் ஆகிய ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 961 ஆகும். ஆனால் கொரோனா இதுவரை 12 ஆயிரத்து 854 பேரை பலி கொண்டிருக்கிறது
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதியளவு நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
நியூயார்க்கில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பும் 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இரண்டாம் இடத்தில் நியூஜெர்சி மாகாணமும், மூன்றாம் இடத்தில் மிக்சிகன் மாகாணமும் உள்ளது.
கலிஃபோர்னியாவில் கொரோனாவால் 16 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 385 பேர் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் லூசியானா மாகாணத்தில் 14 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த மருந்து தான் வேணும்' வரிசைகட்டி நிற்கும் உலகநாடுகள்... ஹைட்ராக்ஸி 'குளோரோகுயின்' மருந்தோட வரலாறு தெரியுமா?
- 'ஊரடங்கு' உத்தரவை அமல்படுத்திய... போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 42 பேர் கைது!
- ‘கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான 14 மாத குழந்தை!’.. ‘இந்தியாவையே உலுக்கிய சோகம்!’
- விடுமுறை எடுக்காமல் 'உண்மையை' மறைத்து... வசமாக 'சிக்கிக்கொண்ட' அரசு அதிகாரி... 3 பிரிவுகளின் கீழ் 'வழக்கு' பாய்ந்தது!
- 'என்ன ஒரு புத்திசாலித் தனம்!'.. 'கொரோனாலாம் பக்கத்துலயே நிக்க முடியாது!'.. வீடியோ!
- 'தமிழகத்தின் அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் மாற்றம்!'... என்னென்ன தொழிற்சாலைகள் இயங்கும்!?... தமிழக அரசு அறிவிப்பு!
- 'ஒருவர் ஊரடங்கை மீறும்போது வரும் அபாயம் என்ன!?'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
- 'அமெரிக்காவை' கொரோனா ஆட்டிப்படைக்க... 'இவர்கள்' தான் முக்கிய காரணம்... வெளியான 'புதிய' தகவல்?
- 'தமிழகத்தில்' மேலும் 69 பேருக்கு 'கொரோனா!'.. 'உயிரிழந்தோர்' எண்ணிக்கை 7ஆக 'உயர்வு'!
- கொரோனாவால் அம்பானி இழந்தது எவ்வளவு தெரியுமா?... டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போன இந்தியர்கள் யார்?... கடும் நெருக்கடியில் இந்திய நிறுவனங்கள்!