VIDEO : "மரண படுக்கையிலும் மறக்காது 'கண்மணி'யே"... 'மனம்' உருகி நிற்கும் நெட்டிசன்கள்... 'நெகிழ' வைத்த காதல் 'திருமணம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் சான் ஆண்டனியோ பகுதியை சேர்ந்தவர் கார்லோஸ். இவர் கிரேஸ் என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த நிலையில், கார்லோஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்த நிலையில், அவரது காதலி கிரேஸ் மிகவும் கவலையடைந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையை சேர்ந்த நபர் ஒருவர், கார்லோஸ் மற்றும் கிரேஸ் ஆகியோரின் திருமணத்தை மருத்துவமனையிலேயே நடத்த முடிவு செய்துள்ளார். அப்படி திருமணம் நடக்கும் பட்சத்தில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம் என இந்த திட்டத்தை போட்டுள்ளனர்.
கார்லோஸ் - கிரேஸ் ஆகியோரின் திருமண தேதி நெருங்க நெருங்க கார்லோஸின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த திருமணம் மருத்துவமனையிலேயே நடைபெறுவதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவமனை பணியாளர்கள் சிறப்பாக செய்தனர். அதே போல, மணப்பெண் மற்றும் மணமகனிற்கு திருமண ஆடைகளையும் தயார் செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், குறித்த தேதியிலேயே இவர்களது திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்த கார்லோஸ், திருமணத்திற்கு பின் மிகப்பெரிய அளவில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளார். தற்போது மருத்துருவமனையில் இருக்கும் கார்லோஸ், விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்னா ஒரு வில்லத்தனமான 'உறுதிமொழி'..." "தமிழ் சினிமா 'வில்லன்களுக்கே' 'டஃப்' கொடுத்த கல்லூரி முதல்வர்..." "ஸ்டிரிக்ட் 'ஆபிஸரா' இருந்திருப்பாரு போல..."
- 'என்ன மீறியா கல்யாணம் பண்ற'...'இரு பாத்துக்குறேன்'...'கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!
- 'ஆசையா ஊருக்கு வந்தா'... 'காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்'... பதற வைக்கும் வீடியோ!