'இந்தியா' to 'அமெரிக்கா' : 'அதிபர்' தேர்தலில் களம் காணும் 'இந்திய' வம்சாவளி 'பெண்'!!... யார் இந்த 'கமலா ஹாரிஸ்'?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்டியிடவுள்ள நிலையில் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட வேண்டி இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரை ஜோ பிடன் தேர்ந்தெடுத்துள்ளார். துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ் ஆகும். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பையும் அவர் பெற்றிருக்கிறார்.

55 வயதான கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் சென்னையை பூர்விகமாக கொண்டவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலா ஹாரிஸுக்கு 7 வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். கலிபோர்னியாவில் பிறந்த கமலா ஹாரிஸ், கனடாவில் தனது பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவருக்கு ஒரு சகோதரியுண்டு.

கமலா ஹாரிஸின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர். கமலா ஹாரிஸ் தனது தாய், இந்தியா செல்லும் போது எல்லாம் உடன் தானும் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ள கமலா ஹாரிஸ், அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும், சட்டமும் படித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் சான்பிரான்சிகோவின் 27 ஆவது மாவட்ட வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல, கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

அமெரிக்க அரசியலில் கறுப்பின பெண்களில் ஒருவரான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் தவிர்க்க முடியாத ஆளுமை ஆகும். சிறந்த திறமையுள்ள கமலா ஹாரிஸ், துணை அதிபர் போட்டியில் கமலா வெற்றி பெற்றால் 2024ஆண்டுக்குள் அதிபர் போட்டியில் மீண்டும் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய மற்றும் ஆசிய பூர்விகம் கொண்ட முதல் நபர் கமலா ஹாரிஸ் என்பது பெருமைக்குரிய காரியமாகும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்