'சீனாவுக்கு' எதிராக '18 அம்சத் திட்டம்...' 'அமெரிக்காவுடன்' கை கோர்க்கும் 'இந்தியா...' 'இந்தியாவுக்கு' அடிக்கப் போகும் 'ஜாக்பாட்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை மூடி மறைத்த விவகாரத்தில் சீனாவை பொறுப்பேற்க வைக்கும் 18 அம்ச திட்டத்தை அமெரிக்கா தயாரித்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா உடனான ராணுவ உறவுகளை மேம்படுத்துவது, தேவையான கருவிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்வது என முடிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து பரவியது என்றும், சீனா ஆரம்பகட்ட தகவல்களை மறைத்து உலகை இத்தகைய நிலைக்கு தள்ளிவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த விவகாரத்தில் சீன அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்க, இந்தியாவுடனான இராணுவ உறவை மேம்படுத்துவது உட்பட 18 அம்ச திட்டத்தை அமெரிக்காவின் முக்கிய செனட்டர் டாம் தில்லிஸ் வெளியிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக பிராந்திய நட்பு நாடுகளான இந்தியா, தைவான் மற்றும் வியட்நாம் உடனான ராணுவ உறவை மேலும் அதிகரிக்கவும், தேவையான உபகரணங்களை விற்கவும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அதே போல் ஜப்பான் ராணுவத்தை மறுகட்டமைக்க ஊக்குவிக்க வேண்டும், ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் தேவையான ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் சீன உற்பத்திகளை அமெரிக்காவே தயாரிப்பது, விநியோக சங்கிலிக்காக சீனாவை சார்ந்திருப்பதை படிப்படியாக நீக்குவது, அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா திருடாத வகையில் சைபர் பாதுகாப்பை பலப்படுத்துவது, சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவேவுக்கு தடை, நட்பு நாடுகளையும் தடை விதிக்க கோருவது, வைரஸ் பற்றி பொய் கூறியதற்காக பொருளாதார தடை மற்றும் நஷ்டஈடு கோருவது, 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பீஜிங்கிலிருந்து மாற்றுவது போன்ற அதிரடி அம்சங்களை கொண்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ‘கட்டுப்பாடு’ தளர்வு.. லிஸ்ட்ல உங்க ‘ஏரியா’ இருக்கான்னு ‘ஷெக்’ பண்ணிக்கோங்க..!
- 'சல்லி சல்லியா நொறுங்கிய சோஷியல் டிஸ்டன்சிங்'... 'ஊரே கூடி நடத்திய திருவிழா'... அதிரவைக்கும் சம்பவம்!
- 'செப்டம்பருக்குள்' 'தடுப்பூசி' என்று சொல்லப்படுவதில் 'நம்பிக்கையில்லை...' 'சோதனையில்' உள்ள மருந்துகளும் 'கைவிடப்பட' வாய்ப்பு... 'ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அதிர்ச்சித் தகவல்...'
- 'சீனாவுக்கு' எப்படி 'அமெரிக்கா' பதிலடி 'கொடுக்கும்...' 'கேள்விக்கு' அதிரடி பதிலளித்த 'ட்ரம்ப்...' 'சீன நிறுவனங்களுக்கு விரைவில் செக்...'
- தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஏன் தேவைப்படுகிறது?.. அரசு தரப்பு வக்கீல் பரபரப்பு வாதம்... வெளியான அதிர்ச்சி தகவல்!
- '10 லட்சம்' பேர் தங்கியுள்ள உலகின் பெரிய 'அகதிகள் முகாம்...' '2 பேருக்கு கொரோனா பாசிடிவ்...' 'அடுத்து நடக்கப் போகும் விபரீதம்...'
- 'ஒரே அடில லைப் செட்டில்'... '97 கோடியை சுருட்ட இந்திய என்ஜினீயர் போட்ட பிளான்'... அரண்டு போன அமெரிக்க அதிகாரிகள்!
- 'கொரோனாவுக்கு இடையே'... 'பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து சைலண்ட்டாக பார்க்கும் காரியம்'!
- வீட்டுக்கே 'டோர் டெலிவரி' பண்றோம்... ஒரு பைசா கூட 'எக்ஸ்ட்ரா' குடுக்க வேணாம்... அதிரடியாக அறிவித்த மாநிலம்!
- ‘நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை’... ‘15 நாட்களில் இரு மடங்காக உயர்வு’!