"ஆஹா, இட்லி, தோசைக்கு இப்டி ஒரு பெயரு வெச்சு இருக்காங்களே.." அமெரிக்க ஹோட்டலின் மெனுவை பார்த்து ஆடி போன தென் இந்தியர்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நமது ஊரில் இட்லி, தோசை, வடை என்றாலே பல பேரும் அதனுடைய தீவிர ரசிகர்களாக இருப்பார்கள். காலையில் எழுந்து, இட்லி அல்லது தோசையுடன் ஒரு வடையை காலை உணவாக எடுத்துக் கொண்டால் தான் பலரது நாளும் சிறப்பாக இருப்பது போல தோன்றும்.

Advertising
>
Advertising

காலை நேரத்தில், சூடு பறக்க இட்லி மற்றும் தோசை ஆகியவை உணவகங்களில் தயாராவதை பார்த்திருப்போம். இப்படி இட்லி மற்றும் தோசை உள்ளிட்டவை நமது ஊர்களில் ஸ்பெஷலாக இருந்தாலும், இந்த தென் இந்திய உணவு, இந்தியாவை தாண்டி, பிரபலம் எந்த அளவுக்கு என்பது தெரியாது.

அதே வேளையில், வெளிநாடுகளிலும் இது போன்ற உணவு வகைகள் கிடைப்பது சற்று கடினமான காரியம் தான்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் தென் இந்திய உணவுகள் விற்கப்படும் நிலையில், இது தொடர்பான மெனு ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இணையத்திற்குள் நாம் நுழைந்தாலே, அதில் வித்தியசமான மற்றும் வினோதமான செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது. அடிக்கடி, எதாவது ஒரு புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வைரலாகி கொண்டு தான் இருக்கும்.

அப்படி தான், தற்போது அமெரிக்காவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் இட்லி, தோசை மற்றும் வடை ஆகியவை விற்கப்பட்டு வருகிறது. தென் இந்திய உணவுகள் அமெரிக்காவில் விற்கப்படுவதில் பெரிய வியப்பு வேண்டாம் என்றாலும், அவர்கள் அந்த உணவுகளுக்கு வைத்துள்ள பெயர் தான், பலரையும் பிரம்மிக்கவும், சிலரை அதிர்ந்து போகவும் செய்துள்ளது.

இதில், இட்லிக்கு 'Rice cake delight' என்றும், சாம்பார் வடைக்கு 'Dounghnut delight' என்றும், தொடர்ந்து தோசைக்கு காரம், இனிப்பு வகைகளை குறிப்பிடப்படும் 'Crepe' என்ற பெயரையும் வைத்திருக்கிறார்கள். அதிலும், சாதா தோசைக்கு 'Naked Crepe' என்ற பெயரும், மசால் தோசைக்கு 'Smashed potato Crepe' என்ற பெயரும், இப்படி ஒவ்வொரு வகை தோசைக்கும் அதற்கேற்ற வகையில் பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பான பதிவுகளை இந்தியர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், அதே வேளையில், இட்லி, தோசை என்ற பெயர்களை பயன்படுத்துவதை விட, அமெரிக்க மக்களை கவர வேண்டும் என்பதற்காக, அதற்கேற்ற வகையில் அவர்கள் பெயர்களை வைத்திருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகிறார்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும், இட்லி, தோசைக்கு அமெரிக்க உணவகம் வைத்துள்ள பெயர், இணையத்தில் அதிகம் Trend ஆகி வருகிறது.

IDLI, DOSA, VADAI, AMERICAN HOTEL MENU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்