"அமெரிக்கா போனாலும் மாற மாட்டாங்க போல" - சக இந்தியரை 'சாதி' ரீதியாக துன்புறுத்திய இருவர் மீது வழக்கு!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் ஜாதி அடிப்படையில் ஊழியர் ஒருவர் மீது பாகுபாடு காட்டி துன்புறுத்தியதாக மேலாளர்கள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த அந்த பாதிக்கப்பட்ட நபர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவராவர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் அமைந்துள்ள சிஸ்கோ தலைமையகத்தில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பொறியியல் மேலாளராக இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து சாதி ரீதியாக அந்த பட்டியலினத்தை சேர்ந்த ஊழியரை மனரீதியாக துன்புறுத்தி, அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்காமல் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஸ்கோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், 'சட்டத்தின் படி பணியிடங்களில் அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். இந்த சம்பவம் குறித்து நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்' என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இன்னும் இதுபோன்ற சாதி தீண்டாமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் இது போன்ற கொடுமைகள் அரங்கேறுவது மக்களின் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
முன்னதாக, 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மக்கள் உரிமைகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க பணியிடங்களில் 67 சதவீத பட்டியலின ஊழியர்கள் ஜாதி ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே?.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த நாடு!
- 'இந்தியாவுக்கு' ஆதரவாக 'படைகளை' அனுப்புவோம்... 'சீனாவின்' கொட்டத்திற்கு 'பதிலடி' கொடுப்போம்... 'அதிரடியாக அறிவித்த நாடு...'
- 'அமெரிக்கா' அதிகாரப்பூர்வமாக 'அறிவித்ததை விட...' '7 மடங்கு அதிகம்...' 'உண்மையான' கொரோனா 'பாதிப்பை...' 'அம்பலப்படுத்தியது சுகாதாரத்துறை...'
- 'சீனாவை' சுற்றி வளைக்க அமெரிக்கா திட்டம்... 'படைபலத்தை' ஒன்று திரட்ட 'முடிவு...' 'மைக் பாம்பியோ' 'மாஸ்டர் பிளான்...'
- 'டிரம்ப்' மனைவி 'மெலனியா...' 'ஹெச்-1பி' விசாவில் 'அமெரிக்கா வந்தவர்தான்...' 'ஓ...' 'இப்படி ஒரு கதை இருக்கா...'
- 'இந்திய படைகள்' மீது 'தாக்குதல்' நடத்துங்கள்... 'சீன' ராணுவ ஜெனரல் 'உத்தரவு...' அமெரிக்க 'உளவுத்துறை' அதிர்ச்சி 'தகவல்...'
- "ஊரடங்கு இன்னும் முடியல!.. அதனால".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு!
- கொரோனாவுக்கு 'பட்டப்பெயர்' வைக்கும் 'ட்ரம்ப்...' '19 பெயர்கள்' வைத்திருக்கிறாராம்... 'சீனாவை' வித்தியாசமாக கலாய்த்த 'ட்ரம்ப்...'
- 'இந்தியா- சீனாவுக்கு' சண்டை வந்தால்... 'எந்த நாடு வெற்றிபெறும்...' சர்வதேச 'பெல்பர் மையம்' கணிப்பு...
- இன்னும் கொஞ்ச நாளுல தெரியும்... 'டிரம்ப்' எடுக்கும் அடுத்த 'மூவ்'... 3 லட்சம் இந்திய 'ஐ.டி' ஊழியர்கள் நெலம 'கஷ்டம்' தான்?!