18 மணி நேரமா.. காருக்குள் இருந்த இளம்பெண்?.. மகள் அனுப்பிய திகிலூட்டும் வீடியோவை பார்த்து கதிகலங்கிய தாய்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வீசிய பனிப்புயலின் காரணமாக இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றது. இது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் பெரும் பகுதி பனிகளால் சூழப்பட்டும் உள்ளது.
கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக தொடர்ந்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இதனால் பலரும் அவதிக்கு உள்ளாகியும் வருகின்றனர்.
இந்த நிலையில், நியூயார்க் மாகாணத்தில் வேலைக்கு சென்று திரும்பிய பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான செய்தி, பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
வழக்கமாக கிறிஸ்துமஸ் நேரத்தில் அமெரிக்காவில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். இதற்காக பொதுமக்கள் முன்கூட்டியே தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இந்த முறை ஆர்டிக் பகுதியில் இருந்து வீசிய பனிப்புயல் மொத்த அமெரிக்காவையும் ஸ்தம்பிக்க செய்திருக்கிறது. இந்த புயல் காரணமாக சாலைகள் எங்கும் பனி நிறைந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், விமான சேவைகளையும் சில மாகாணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றன.
அப்படி ஒரு சூழலில், பப்பலோ நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணான அண்டெல் டெய்லர் என்பவர், சில தினங்களுக்கு பணியை முடித்து மதியம் வீடு திரும்பியதாக தகவல்கள் கூறுகின்றது. தொடர்ந்து காரில் அவர் வீடு திரும்பி கொண்டிருந்த போது திடீரென பனிப்புயல் வீசியதாகவும் தெரிகிறது. இதனால், காருக்குள்ளேயே அண்டெல் சிக்கிக் கொள்ள, கடுமையான காற்றுடன் பனி வீசியதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இதனால், காரில் பல மணி நேரம் சிக்கிக் கொண்ட அண்டெல், கடும் குளிர் காரணமாக, காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பனிப்புயலில் சிக்கி 18 மணி நேரம் கழித்து அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக, பனிப்புயல் காரணமாக காரில் சிக்கி இருந்த அண்டெல் டெய்லர், அதனை ஒரு வீடியோவாக பதிவு செய்து தாயாருக்கும் அனுப்பி வைத்துள்ளார். அதனை பார்த்த அவரது தாயார், தனது மகள் கார்பன் மோனாக்சைடு சுவாசித்து உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதுகிறார். நள்ளிரவுக்கு பிறகு அவர் பதிவு செய்த அந்த வீடியோவில், வெளியே பலத்த காற்றுடன் பனிப்புயல் வீசுவது தெரிகிறது. அதனை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலரிடமும் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், சுமார் 18 மணி நேரம் கழித்து காரில் இருந்து சடலமாக ஆண்டெல் டெய்லர் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனி செஞ்ச சம்பவம்.. 15 வருசமா தொட முடியாத ரெக்கார்டு.. மிரண்டு போன ரசிகர்கள்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பனிக்குள் தெரிந்த முகம்.. அலறிய பொதுமக்கள்.. தனது பிறந்தநாளை கொண்டாட சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!
- போர்வை போர்த்தியபடி நின்ற கார்.. முன்பக்கம் இருந்த கடிதம்.. பீதியில் உறைந்த பெங்களூர்!!.. திடுக்கிடும் பின்னணி!!
- "அட, இந்தாங்க சாவிய புடிங்க".. காரை போட்டோ எடுத்த இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!
- பெற்றோர் வர தாமதம் .. சாலையில் தனியாக காத்திருந்த மாணவி.. நெகிழ வைத்த காவல்துறை அதிகாரியின் செயல்..!
- ₹10 லட்ச ரூபாயில் 'லம்போர்கினி' காரை உருவாக்கிய இளைஞர்... நேரில் பாராட்டிய முதலமைச்சர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
- நேரா மின் கம்பத்தில் சென்று மோதிய விமானம்.. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்!!..
- காரில் இருந்த வேறொரு பெண்.. கேள்வி கேட்ட மனைவி.. படத் தயாரிப்பாளர் செய்த பதறவைக்கும் காரியம்..!
- "தீபாவளிக்கு வீடியோ கால் பேசுனான்".. அமெரிக்காவில் படித்த மகன்.. ஒரே நாளில் நொறுங்கி போன குடும்பம்.. துயரம்!!
- "33 வருஷம் ஆயிடுச்சு".. கொலை குற்றவாளிய கண்டுபிடிக்க முடியாம திணறிய போலீஸ்.. கொலை வழக்கை திருப்பி போட்ட சம்பவம்!!
- டக்குனு காரை நிறுத்தி கீழே இறங்கிய பிரதமர் மோடி.. முதியவர் கொடுத்த அன்பு பரிசு.. வைரலாகும் வீடியோ..!