'எங்ககிட்ட' இருந்து 'திருட' பாக்குறாங்க... 'சீனா'வுக்கு எதிராக 'பகிரங்க' குற்றச்சாட்டு... 'இந்த' தடவ என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான தங்களின் ஆராய்ச்சி தகவல்களை சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக கொரோனா வைரசை வேண்டுமென்றே மற்ற நாடுகளுக்கு பரப்பியதாக சீனா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. பதிலுக்கு சீனாவும் தங்களது விமர்சனத்தை அமெரிக்காவின் மீது வைத்தது.
தொடர்ந்து இந்த பனிப்போர் நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சீனாவின் மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் கொரோனாவுக்கான சிகிச்சைகள் மற்றும் சோதனைகள் குறித்த தகவல்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை சீன ஹேக்கர்கள் குறி வைப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் முற்றிலுமாக மறுத்துள்ளார். 'கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியில் நாங்கள் உலக நாடுகளை வழிநடத்தி வருகிறோம். ஆதாரம் ஒன்றுமில்லாமல் வெறும் வதந்திகளை கொண்டு எங்கள் மீது குற்றச்சாட்டை வைப்பது ஒழுக்கக்கேடானது' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அட்டகாசம் செய்த சீன ராணுவம்!.. அடக்கிய இளம் இந்திய வீரர்!.. இந்திய-சீன எல்லையில் என்ன நடந்தது?.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'சீனாவுக்கு' எதிராக அணி சேரும் '7 நாடுகள்...' 'வர்த்தக ரீதியாக' தனிமைப்படுத்த 'முடிவு'... '7 நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் விவாதம்...'
- "அதெப்படி என்ன பாத்து அப்படி சொன்னீங்க?".. 'மல்லுக்கட்டிய 'பெண் நிரூபர்'!.. 'சூடான' டிரம்ப் 'பிரஸ் மீட்டில்' செய்த 'காரியம்'!
- 30 ஆண்டுகளுக்கு பின் 'சவுதியில்' இருந்து... திடீரென ஆயுதங்களை 'திரும்பப்பெறும்' அமெரிக்கா... என்ன காரணம்?
- 'உலகம் முழுவதும் கொரோனா பீதியில்...' 'எல்லைப்' பிரச்னையை கையிலெடுக்கும் 'சீனா'... ஏதோ 'திட்டத்துடன்' செயல்படுவதாக 'ஆய்வாளர்கள் கருத்து...'
- "இதுக்கெல்லாம் சீனாகிட்ட போகணுமா?".. "ஒரே மாசத்துல கண்டுபுடுச்சுட்டோம்!".. இந்திய மருத்துவர்கள் சாதனை!
- 'இன்னும்' முடியல... 'அதிரடி' நடவடிக்கைகளால் கொரோனாவை 'வென்றும்'... மக்களை 'அதிர்ச்சியில்' ஆழ்த்தியுள்ள 'எச்சரிக்கை'...
- “கொரோனாவை எங்களால கட்டுப்படுத்த முடியாம போனதுக்கு இதான் காரணம்!” - ஒருவழியாக உண்மையை உடைத்த மூத்த சீன அதிகாரி!
- இந்திய-சீன எல்லையில் பரபரப்பு!.. இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே திடீர் மோதல்!.. என்ன நடந்தது?
- '25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்...