பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர்… 2 மாதங்களுக்கு பிறகு நடந்த பெரும் சோகம்
முகப்பு > செய்திகள் > உலகம்உலகில் முதல் முதலாக பன்றியின் இதயத்தை தானமாக பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் 2 மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.
IPL 2022: மனம் திறந்து கேட்ட கோலி… மீண்டும் ஆர் சி பி அணியில் இணையும் Mr 360!
உலகை கவனிக்க வைத்த அறுவை சிகிச்சை
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியைச் சேர்ந்த இதய நோயாளியான 59 வயதான பன்றியின் இதயம் அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். டேவிட் பென்னட் கடந்த சில ஆண்டுகளாகவே இதய நோயினால் பாதிக்கப்பட்டுவந்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் அவரது உடல்நிலை மோசமாகவே, இதய - நுரையீரல் பைபாஸ் இயந்திரத்தின் மூலமாகவே அவர் உயிர்வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நாள் முழுவதும் படுக்கையிலேயே தவித்த பென்னட்டுக்கு மருத்துவர்கள் இந்த உறுப்பு மாற்று சிகிச்சையைப் பரிந்துரை செய்துள்ளனர்.
மரபணு மாற்று இதயம்
கடந்த ஜனவரி மாதம் பென்னட்டிற்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் குழு அறிவித்தது. உறுப்பு தானம் செய்த பன்றியின் உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இதயத்தில் 10 விதமான மரபணு மாற்றத்தை செய்தததாக தெரிவித்தனர் மருத்துவர்கள். இதய திசுக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜீனை நீக்குதல், மனிதர்களது உடம்போடு ஒத்துப்போகும் வகையில் புதிய 6 ஜீன்களை செலுத்துதல் ஆகியவற்றை மருத்துவர்கள் மேற்கொண்ட பிறகு, அந்த இதயம் பென்னட்டிற்கு பொருத்தப்பட்டதாக அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
நோயாளிகளின் நம்பிக்கை
பென்னட்டிற்கு பன்றியின் இதயத்தை பொருத்தும் சிக்கலான ஆப்பரேஷனில் கலந்துகொண்ட மருத்துவர் பார்ட்லி கிரிஃப்த் இதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை எனக் கூறியிருந்தார். இந்த அறுவை சிகிச்சை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் எனவும் சொலல்ப்பட்டது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 110,000 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்து அதற்க்காக காத்திருப்பதாகவும் 6000 பேர் தங்களுக்கான உறுப்புக்கள் தானமாக கிடைப்பதற்கு முன்னேரே மரணமடைவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பென்னட்டிக்கு நடந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நபர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது என சொல்லப்பட்டது.
திடீர் மரணம்
ஜனவரி 7 ஆம் தேதி நடத்தி முடிக்கப்பட்ட இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு பென்னட் நலமாக இருந்ததாகவும் அவரின் இதயம் நல்ல விதமாக செயல்பட்டுள்ளதாகவும் சொல்லப்படு வந்தது. கடந்த மாதம் அவர் நலமாக இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் பகிர்ந்து இருந்தது. ஆனால் அவர் இப்போது திடீரென உயிரிழந்துள்ளார். பென்னட்டின் மரணம் அவரின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பென்னட் பொறுமையும் நிதானமும் கொண்டவராக சிகிச்சைக்கு ஒத்துழைப்பவராக இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பாஸிட்டிவ்.. 549 நாள் ட்ரீட்மெண்ட் முடித்து வீடு திரும்பிய நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!
- "என் குழந்தைய காப்பாத்துங்க சார்..கதறிய தாய்".. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து ஷாக்கான டாக்டர்கள்..!
- "இதய தானம் கிடைக்கல".. பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்திய டாக்டர்கள் .. - வெற்றியில் முடிந்த வினோத ஆப்பரேஷன்..!
- எங்க சர்வீஸ்ல 'இப்படி' ஒரு கேஸ் பார்த்ததே இல்ல...! 'மொத்தம் 156 கற்கள்...' - 'அதிர்ந்து' போன மருத்துவர்கள்...!
- FB-ல ஒரே ஒரு போஸ்ட் தான்.. காசு நிக்காம வந்துட்டே இருக்கு.. பெண் ஊழியருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- இளைஞர்களுடன் ‘டேட்டிங்’.. காலேஜில் பல லட்சம் ஸ்காலர்ஷிப்.. மகளையே ஏமாற்றி அதிர வைத்த அம்மா..!
- VIDEO: இதெல்லாம் ரொம்ப மோசம்.. அவுட்டில் இருந்து தப்பிக்க இப்படியா பண்ணுவீங்க.. சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!
- '100 மில்லியன் தொழிலாளர்கள் கதி அவ்வளவு தானா'?.. அதிபர் பைடன் முடிவால்... அமெரிக்காவில் பதற்றம்!.. பீதியை கிளப்பும் புதிய விதிகள்!
- 'அமெரிக்கா விட்டுட்டு போன... எல்லா ராணுவ ஐட்டங்களையும் வெளிய எடுங்க டா'!.. தாலிபான்கள் 'அத' வச்சு என்ன பண்றாங்க தெரியுமா?
- 'அது தீவிரவாதிகளோட வண்டி தான்'!.. கண் இமைக்கும் நேரத்தில்... சாம்பலாக்கிய அமெரிக்க ராணுவம்!.. பக்கத்தில போய் பார்த்தா... குலை நடுங்கவைக்கும் ட்விஸ்ட்!