'வேலையை விட ரெடியா?'... உங்க 'பாக்கெட்ல பல லட்சங்கள்' இருக்கும்... 'பிரபல நிறுவனம்' அதிரடி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தங்களது நிறுவனத்தில் பார்க்கும் வேலையை ராஜினாமா செய்வதற்கு தயாராக இருந்தால்,7 லட்ச ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என,அமேசான் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்க நிறுவனம் அமேசான். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதன் வர்த்தகம் விரிந்துள்ளது.பல லட்சக்கணக்கான பொருட்கள்,சரியான நேரத்திற்கு பொருட்களின் டெலிவரி என இதன் சேவை சிறப்பாக இருப்பதால்,மக்களிடையே அமேசான் நிறுவனம் மிகவும் பிரசித்திபெற்ற நிறுவனமாக திகழ்கிறது.வளர்ந்து வரும் சந்தையில் பொருட்களை சரியான நேரத்திற்கு டெலிவரி செய்ய வேண்டும் என்பது தற்போது,மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இது போன்ற சில நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அமேசான் நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதன்படி தற்போது பொருட்களை பேக்கேஜ் செய்யும் ஊழியர்களுக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த இ‌யந்திரங்கள் மூலம் மணிக்கு 700 பெட்டிகள் வரை பேக்கேஜ் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.அவ்வாறு அமேசான் பொருட்களை விரைவாக டெலிவரி செய்யும் வகையில்,தங்களது பணியினை ராஜினாமா செய்தால்,சுயதொழில் தொடங்க உதவுவதாக அமேசான் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த திட்டத்தின்படி தங்களது பணியினை ராஜினாமா செய்ய முன்வரும் ஊழியர்களுக்கு, உதவித் தொகையாக 7 லட்சம் ரூபாயும், 3  மாத சம்பளமும் வழங்குவதாக அமேசான் கூறியுள்ளது. இதனிடையே இந்த திட்டத்தின் மூலம்,இன்னும் பொருட்களை வேகமாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என அமேசான் நம்புகிறது.மேலும் அந்நிறுவனத்தின் பணியாற்றும் பல ஊழியர்கள் தங்களது பணியினை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்,என்பது குறிப்பிடத்தக்கது.

AMAZON, OWN DELIVERY BUSINESSES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்