உலகையே 'முடக்கி' போட்டுள்ள... 'கொரோனா' லாக்டவுனிலும்... 'சொத்து' மதிப்பை 'உயர்த்தி' கொண்டே போகும் உலகப் 'பணக்காரர்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா அச்சுறுத்தலிலும் உலகப் பணக்காரர்களில் ஒருவரரான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டே செல்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளிலும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல தொழில்துறை நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்த சூழலிலும் கூட உலகப் பணக்காரர்களில் ஒருவரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில், தங்களுடைய அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பலரும் அமேசான் நிறுவனத்தையே நம்பியுள்ளனர். இதன்காரணமாக சில்லரை விற்பனையாளர்களின் பங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 5.3 சதவிகிதம் உயர்ந்து அந்நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 138.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
அமேசான் நிறுவனர் பெசோஸ் 2020 ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை தனது சொத்து மதிப்பில் கூடுதலாக 24 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்த்துள்ளார். அத்துடன் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற மெக்கன்சியின் சொத்து மதிப்பு 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 45.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 10.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்த்துள்ளார். அடுத்ததாக உலக நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஜூம் செயலியின் நிறுவனர் எரிக் யுவானின் சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா பாதிப்பு'... '4 வண்ணங்களாக பிரிக்கப்பட்ட சென்னை'... 'அதிகம் பாதித்தவர்கள் இவர்கள்தான்'... 'சென்னை மாநகராட்சி வெளியீடு'!
- முந்தைய 21 நாள் ஊரடங்கினால்... கொரோனா 'தொற்று' குறைந்ததா?... 'புள்ளி விவரம்' என்ன சொல்கிறது?
- ‘பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா உறுதி!’.. ‘ஆர்டர் செய்த 72 குடும்பங்களின் தற்போதைய நிலை இதுதான்!’
- 'உண்மையான' பாதிப்பு '7 லட்சத்திற்கும்' மேல்... உலகிலேயே 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடாக 'மாற' வாய்ப்பு... 'அதிர்ச்சி' கொடுக்கும் அறிக்கை...
- 'நாங்க ஒரு பக்கம் கஷ்டப்படுறோம்'... 'மறுபக்கம் சைலண்டா கொரோனாவை பரப்பிய கும்பல்'... சேலத்தில் அதிரடி கைது!
- ‘உண்மையா கொரோனா வைரஸ்’... ‘எங்கிருந்து வந்ததுச்சுனு சொல்லுங்க’... ‘அப்பத்தான் எல்லோருக்கும் நல்லது’... ‘சீனாவிடம் ஆதாரம் கேட்கும் நாடு’!
- 'வுஹான்' ஆய்வகத்தில் தான்... 'உண்மையிலேயே' கொரோனா 'உருவானதா?'... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...
- 'தொடரும் ஊரடங்கு'... 'கல்லூரித் தேர்வுகள் எப்போது நடக்கும்'?... உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
- 'பட்டினி' கிடந்த "குடும்பம்"... 'ஒரே' ஒரு வார்த்தையில் வந்த "மெசேஜ்"...'திரைக்கதை' ஆசிரியரின் நெஞ்சை உருக வைக்கும் பதிவு!
- உணவின்றி தவித்த ஏழைகள்!.. 8 நாட்களில் ரூ.6 லட்சம் நிதி திரட்டிய... 6ம் வகுப்பு மாணவி!