3 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும், ஆனா.. அமேசான் போட்ட கண்டிஷன்.. அறிவிப்புடன் மெயிலில் வந்த அட்வைஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமேசானில் இருந்து வெளியேறினால் சுமார் 3 லட்சம் வரை போனஸ் வழங்கப்படும் என தங்கள் ஊழியர்களுக்கு செக் வைத்துள்ளது அமேசான் நிறுவனம்.

Advertising
>
Advertising

அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெசோஸ் நேற்று தங்கள் ஊழியர்களுக்கு தகவலை மெயில் மூலம் அனுப்பியுள்ளார். இதை கண்டு ஊழியர்கள் அழுவதா சிரிப்பதா என்றே குழம்பியுள்ளனர்.

'Pay to Quit' போனஸ் தொகை:

அந்த தகவலில், அமேசான் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள், முன்னேற்றம், சாதனைகள், புதிய செய்திகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பகிர்ந்து கொண்டதோடு ஒரு செக் பாயிண்ட்டையும் சேர்த்துத்துள்ளார். அது என்னவென்றால், 'Pay to Quit' போனஸ் தொகை பற்றி தான். இது என்னடா நம்ப லிஸ்ட்டிலேயே இல்ல நினைத்து ஊழியர்கள் குழம்பி வருகின்றனர்.

பொதுவாக வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது உலக வழக்கம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த 'Pay to Quit' போனஸ் என்னவென்றால், வேலையில் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பதாம்.

மனைவி வாங்கிய செல்போன்.. இரவில் வீட்டுக்கு வராத கணவன்.. ஊரே நடுங்கும் விதமாக கேட்ட அலறல் சத்தம்.. என்ன நடந்தது?

சுமார் 2000 டாலர் முதல் 5000 டாலர் வரை போனஸ்:

அமேசான் கிடங்குகளில் முழு நேர ஊழியர்களாக வேலையில் இருப்பவர்கள் வேலையில் இருந்து வெளியேறினால் அவர்களுக்கு சுமார் 2000 டாலர் முதல் 5000 டாலர் வரை போனஸ் வழங்கப்படுமாம். 5000 டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 3.72 லட்சம் ரூபாயாகும்.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை ஆகிவிடும்:

இந்த மதிப்பை பார்த்தவுடன் எல்லோருக்கும் வேலையை விட்டு போகலாம் என்று தான் தோன்றும்  ஆனால் இதில் இருக்கும் செக் பாயிண்ட் என்னவென்றால் வேலையில் இருந்து வெளியேறும் ஊழியர்கள் மீண்டும் அமேசான் நிறுவனத்தில் சேரவே முடியாதாம். இது அரசனை நம்பி புருஷனை கைவிடும் செயல் என பலர் புலம்பி வருகின்றனர்.

சீன பொருட்கள் வேண்டாம்யா.. 'மேட் இன் இந்தியா' கொடுங்க.. சீனாவிற்கு போகவேண்டிய ஆர்டர்கள் இந்தியா பக்கம் திரும்புவது ஏன்?

இந்த சலுகையை யாரும் எடுக்க வேண்டாம்:

அதோடு அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெசோஸ் அந்த மெயிலிலேயே இந்த சலுகையை யாரும் எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

AMAZON, PAY TO QUIT BONUS, அமேசான், போனஸ் தொகை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்