'இந்த பொருள் மட்டும் அமேசானில் அவுட் ஆஃப் ஸ்டாக்காம்...' 'அது இல்லன்னா எப்படி...' அமெரிக்க மக்கள் பயங்கர கடுப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமேசானில் டாய்லெட் பேப்பர் அவுட் ஆஃப் ஸ்டாக் என காட்டுவதால் அமெரிக்க மக்கள் கடுப்பில் இருப்பதாக செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகை சாமான் பொருட்களுக்கே அதிக தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் அமெரிக்காவில் மட்டும் டாய்லெட் பேப்பருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக அனைத்து நாடுகளும் அத்யாவசிய பொருட்களை தவிர பிற பொருட்களை ஆன்லைனில் விற்க தடை செய்துள்ளது.

இந்த நிலையிலும் அமேசான் நிறுவனம் கடந்த நாட்களில் பல நூற்றுக்கணக்கான பணியாளர்களை தங்களின் நிறுவனத்தில் சேர்ந்தது. இதற்கு காரணம் கொரோனா பீதியால் அமெரிக்காவில் மக்கள் வீடுகளிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் அவர்களின் முக்கிய அன்றாட தேவையாக கருதுவது டாய்லெட் பேப்பர்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றின் நிலை இதுதான். மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 250 கோடி மக்கள் உலக முழுவதும் அமேசான் இணையதளத்தில் பொருட்களை வாங்க வந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தேடியது டாய்லெட் பேப்பர் மற்றும் பேப்பர் டவல் தான் என கூறுகிறது அமேசான். ஆனால் தற்போது தனக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அமேசான் கூறும் பதில் அவுட் ஆஃப் ஸ்டாக்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்