தெருவில் கிடந்த வித்தியாசமான உருவம்... "என்னன்னே தெரியல".. குழப்பத்தில் உயிரியல் நிபுணர்கள்.. வைரல் வீடியோ.

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரலியாவின் சிட்னி நகரில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கே சரியான விபரம் தெரியவில்லை. இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது.

Advertising
>
Advertising

“சாப்டுட்டு கால் பண்றேன்னு சொன்னான்.. ஆனா”.. உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை உருக்கம்..!

சிட்னியின் புறநகர் பகுதியான மேரிக்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் ஹாரி ஹேய்ஸ். இவர் தினந்தோறும் ஜாகிங் செல்வது வழக்கம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மேரிக்வில்லே  பகுதியில் கன மழை பெய்திருக்கிறது. அடுத்த நாள் ஹரி வழக்கம்போல ஜாகிங் சென்றுள்ளார். அப்போது, சாலையில் வித்தியாசமாக ஏதோ கிடப்பதை அவர் பார்த்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஹாரி," பார்ப்பதற்கு ஒருவகையான கரு போல இருந்தது அது. ஆனால், உலகில் கொரோனா, போர்கள் நடந்து வருவதை பார்க்கையில் இது ஒரு ஏலியனாக இருக்கலாம்" எனத் தோன்றியது.

இந்த வித்தியாசமான உயிரினத்தை வீடியோ எடுத்து ஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தற்போது அது வைரலாகி இருக்கிறது.

ஏலியன்

இந்த வித்தியாச உயிரினம் குறித்த வீடியோவை கண்ட  அஹேன்கன் என்னும் ஆஸ்திரேலிய பிரபலம், "இது என்ன?" என கேட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் படையெடுத்த நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்தனர். ஒருவர் "இது சுறா மீனின் கருவாக இருக்கலாம்" என்றும் மற்றொருவர் "இது ஏலியன் தான்" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உயிரியல் நிபுணரான எல்லி எலிசா என்பவரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர்," இது போசம்/கிளைடர் கருவாக இருக்கலாம். ஆனால், இதன் எடை, அளவு குறித்து தெரியாததால் என்னால் உறுதியாக அதை சொல்ல முடியாது' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வினோத உயிரினத்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கியுள்ளனர். அதுவரையில் அந்த உயிரினம் என்ன என்பதற்கு நெட்டிசன்கள் புதுப்புது பதில்களை அளித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

 

Russia – Ukraine Crisis: இந்திய மாணவர்கள் விமானத்துல ஏறினதும்.. பைலட் சொன்ன விஷயம்.. கண்கலங்கிய மாணவர்கள்.. வைரல் வீடியோ..!

 

ALIEN, SYDNEY, AUTRALIA, BIZARRE, CREATURE FOUND AFTER RAINFALL IN SYDNEY, வித்தியாசமான உருவம், ஆஸ்திரலியா, வித்தியாசமான உயிரினம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்