'ஏற்கனவே ஓவர் ஸ்பீடு!'.. போலீஸை பார்த்ததும் இன்னும் அதிவேகமாக பறந்த கார்!.. விரட்டிப்பிடித்து கதவைத் திறந்து பார்த்ததும் ஷாக் ஆகி நின்ற போலீஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் கார் ஒன்று குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றதைக் கண்ட போலீசார் உடனடியாக அந்த காரை பின் தொடர்ந்துள்ளனர்.

அல்பர்ட்டாவில் மணிக்கு 60 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய சாலை ஒன்றில் 86 மைல் வேகத்தில் பாய்ந்து சென்ற காரை கவனித்த போலீசார் அந்த காரை சிவப்பு விளக்குகள் எரிய, சைரன் ஒலியுடன் துரத்தினர். அதை அறிந்ததும் அந்த கால் மேலும் வேகத்தை அதிகரித்து 93 மைல் வேகத்தில் பறந்துள்ளது. காரின் அருகே சென்ற போலீசார் காருக்குள்ளே பார்த்தபோது பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது.

அந்த காரில் டிரைவர் இருக்கையில் இருந்தவரும் பக்கத்து இருக்கையில் இருந்தவரும் தங்கள் இருக்கைகலை சாய்த்து வைத்துக்கொண்டு ஆழமான தூக்கத்தில் இருந்துள்ளனர் . பின்னர் தான் ஆட்டோ பைலட் முறையில் காரை இயங்க விட்டுவிட்டு காரில் இருவரும் உறங்கியுள்ளது தெரியவந்தது.

ஆனால் போலீஸ்காரர்கள் துரத்தத் தொடங்கியதும் கார் தானாகவே வேகத்தை அதிகரித்தது ஏன் என்பதற்குத்தான் விடை கிடைக்காமல் அனைவரும் குழம்பியுள்ளனர். இதனையடுத்து பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த அந்த கார் உரிமையாளர் காரின் வேகக்கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதுடன் அவருடைய ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்