'அது ஓமிக்ரான் ஹோட்டல் சார்...' 'பதறிய டாக்சி டிரைவர்...' எப்படி பெயர் மாறுச்சு...? - பரபரப்பு தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நெதர்லாந்திலுள்ள ரமடா என்னும் விமான நிலைய ஹோட்டல் தற்போது ஓமிக்ரான் விடுதியாக மாறியுள்ளது.

Advertising
>
Advertising

விமான நிலைய ஹோட்டலாக செயல்பட்டு வந்த ஹோட்டல் ரமடாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் புதிய ஒமைக்ரான் வேரியன்ட் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் எல்லா நாடுகளிலும், எல்லா விமான நிலையங்கள் அருகிலும் பயணிகள் தங்குவதற்கு ஹோட்டல்கள் இருக்கும்.

ஆனால், நெதர்லாந்து நாட்டில் உள்ள ஏர்போர்ட் ஹோட்டல் ஓமிக்ரான் ஹோட்டலாக மாறியுள்ளது. அதாவது, உலகிலேயே அதிக அளவு உறுதி செய்யப்பட்ட இடமாக இந்த ஹோட்டல் கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் ஸ்ஷிபோல் விமான நிலையத்தில் உள்ள ரமடா ஹோட்டல், ‘ஹோட்டல் ஓமிக்ரான்’ ஆக மாறியுள்ளது.

சில நாட்களாக கொரோனா வைரசின் புதிய வேரியன்ட் ஓமிக்ரான் உலகம் முழுவதும் பரவி வருவதாக அனைத்து நாடுகளும் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டுள்ளனர். விமான நிலைய ஹோட்டலாக செயல்பட்டு வந்த ஹோட்டல் ரமடாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் புதிய ஓமிக்ரான் வேரியன்ட் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதைப் பற்றி உள்ளூர் டாக்சி டிரைவர் ‘கொரோனா ஹோட்டல்’ என்று கூறுகிறார்.

ஓமிக்ரான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தென் ஆப்பிரிக்காவில் இருந்து  இரண்டு விமானங்களில் பயணித்த 624 பயணிகளில், 61 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. இதை இறுதி செய்த பிறகு, நெதர்லாந்து நாட்டு அதிகாரிகள், அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

அவர்களில் 14 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தனிநபர் சுதந்திரத்தை மதிக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களில் இருக்கும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. ஆனால், தற்போது புதிய தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்று பரவுவதைத் தவிர்க்க, பாதிப்பு அடைந்தவர்கள் குவாரைண்டைன் செய்யப்பட்டள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

OMICRON HOTEL., AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்