"நீங்க மேலாடை போடல.. உள்ள போக முடியாது!".. அனுமதி மறுத்த 'அதிகாரி'.. பிரபஞ்ச அழகிக்கு வந்த சோதனை!! ஹீரோவான காதலன்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மேலாடை அணியாத காரணத்தினால், முன்னாள் பிரபஞ்ச அழகிக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்காவின் புகழ்பெற்ற நபரும், கடந்த 2012 ஆம் ஆண்டு, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவருமானவர் ஒலிவியா காப்லோ.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன், மெக்சிகோவிற்கு செல்ல வேண்டி, விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, இவர் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், ஒலிவியாவுடன், அவரது சகோதரி மற்றும் காதலர் ஆகியோரும் இருந்துள்ளனர்.


அனுமதி மறுப்பு

கபோ சான் லூகாஸ் என்ற ரிசார்ட் ஒன்றிற்கு செல்ல முயன்ற போது தான், ஒலிவியாவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால், அன்றைய தினத்தில், ஒலிவியா கருப்பு நிற கிராப் டாப், ஷார்ட்ஸ் மற்றும் அதற்கு பொருத்தமான ஸ்வெட்டர் அணிந்துள்ளார். இருந்த போதும், அங்கிருந்த விமான நிலைய அதிகாரி ஒருவர், அவரை பிளவுஸ் அணியுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

காப்பாற்றிய காதலன்

அது மட்டுமில்லாமல், அப்படி செய்யவில்லை என்றால், விமானத்தில் ஏற அனுமதி கிடையாது என்றும் அதிகாரி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக, ஒலிவியாவின் சகோதரி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், அனுமதி மறுக்கப்பட்டு நின்ற ஒலிவியா, தன்னுடைய காதலனுக்கு சொந்தமான ஆடை ஒன்றை அணிந்த பிறகே, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏன் அனுமதிக்கவில்லை?

இதனிடையே, விமான நிலையத்திற்குள் சென்ற பிறகு, ஒலிவியாவைப் போன்ற சில பெண்கள், உடை அணிந்து இருப்பதையும் அவர்கள், தங்களின் சமூக வலைத் தளங்களில் பதிவு செய்தனர். அது மட்டுமில்லாமல், அவர்களை எல்லாம் அனுமதித்த அதிகாரிகள், தன்னை ஏன் அனுமதிக்கவில்லை என்றும், ஒலிவியா கேள்வி எழுப்புகிறார்.

வைரலான பதிவு

தன்னைப் போலவே உடை அணிந்த பெண்ணிடம், தனக்கு நேர்ந்ததை பற்றி  விளக்கிய போது, அந்த பெண் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளார். அதன் பிறகு, விமானத்தில் ஏறிய பிறகு, அவர்கள் வெளியிட்ட பதிவில், ஒலிவியாவின் காதலன், தனது கைகளை டீ ஷர்ட்டுக்குள் மடக்கி வைத்துக் கொண்டு, தூங்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.

ஒலிவியாவிற்கு விமான நிலையத்தில், நேர்ந்தது பற்றிய தகவல் மற்றும் பதிவுகள், சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலானது. மேலும், நெட்டிசன்கள் அனைவரும் பல விதமான கருத்துக்களையும், இந்த நிகழ்வு தொடர்பாக பகிர்ந்து வருகின்றனர்.

OLIVIA CULPO, AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்