அப்படியே யூடர்ன் அடிச்சு திரும்பி போயிடுங்க.. இந்த பக்கம்லாம் வரக் கூடாது.. ரிட்டர்ன் ஆன ஏர் இந்தியா விமானம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் இந்திய மாணவர்களை மீட்க சென்ற ஏர்இந்தியா விமானம் நடுவானில் இருந்து அப்படியே இந்தியா திரும்பியுள்ளது.

Advertising
>
Advertising

அங்க அடிச்சா இங்க வலிக்கும்.. உலகையே அதிர வைத்துள்ள ரஷ்யா - உக்ரைன் போர்.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை

ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரைன் மீது போர் தொடுக்க தொடங்கிய நிலையில் உக்ரைனில் எமெர்ஜெண்சி அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு நோட்டா படைகளும், அமெரிக்காவும் சப்போர்ட்டாக உள்ளது. ரஷ்யாவிற்கு பாகிஸ்தான் சீனா இலங்கை ஆப்கானிஸ்தான் என அத்தனை அண்டை நாடுகளும் ஆதரவாக உள்ளது.

தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும்,  உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு போட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வரும் காரணத்தால் அங்கு வாழும் இந்தியர்களை மீட்டு வர ஏர் இந்தியா விமானம் உக்ரைன் புறப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், போர் தொடங்கியதால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியுள்ளது. இந்திய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியதால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருவதால் உக்ரைனில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நிலவுவதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவரச ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக, உக்ரைனில் போர் எழும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் அங்குள்ள இந்தியர்கள், கல்வி பயிலும் மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது.

உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்பதற்கு மாநில அரசு அவசர உதவி மையங்களை ஏற்படுத்தியுள்ளது. 044-28515288, 9600023645 அல்லது 9940256444 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.  https://nrtamils.tn.gov. in என்ற வலைத்தளத்தில் தங்களது விவரங்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரவது எங்கள காப்பாத்துங்க.. ரஷ்யாவுடன் போர் தொடங்கியுள்ள நிலையில் வேண்டுகோள் விடுத்த உக்ரைன்

AIRINDIA, UKRAINE, INDIAN STUDENTS, இந்திய மாணவர்கள், உக்ரைன் ரஷ்யா போர், ஏர் இந்தியா விமானம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்