"விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறிய போர் விமானம்!".. 'கலங்க வைத்த' பெண் விமானியின் 'மரணம்! 'கொரோனா'வில் இருந்து மீண்டு புதிய சோகத்தில் கனடா! வீடியோ

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிய மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடத்தப்பட்ட போர் விமான அணிவகுப்பின்போது விமானம், வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் பெண் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

உலக நாடுகளைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் கனடாவிலும் அதிகமாக பரவியது. தொடக்கத்தில் கொரோனா அதிகரித்த வைரஸ் பாதிப்பு, பின்னாட்களில், அந்நாட்டு அரசின் துரித நடவடிக்கைகளால் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் கொரோனா வைரஸ் தொற்றால் 77 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்காக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களை போற்றும் விதமாக அங்கு போர் விமான அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடக்கமாக, கம்லூப்ஸ் விமான நிலையத்திலிருந்து அணிவகுப்புக்கு கிளம்பிய Snowbird என்கிற அணியின், போர் விமானங்கள், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை அடைந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஒரு போர் விமானம் மட்டும்,  கட்டுப்பாட்டை இழந்து, வானில் சுழன்று வெடித்து, அங்குள்ள வீடுகளின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வீடுகளில் இருந்தவர்கள், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் விமானப்படை பெண் வீரர் Jenn Casey அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்த Jenn Casey, 2014ல் ராணுவ விமானியாகவும், 2018ல் ஸ்னோபர்டு அணியிலும் இணைந்தார். கொரோனாவை எதிர்த்து போராடும் முதல்நிலை

மருத்துவ பணியாளர்களை கவுரவிக்கும் முதல் நிகழ்ச்சியே இப்படியான கோர விபத்தில் முடிந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்