Video : விமானத்தில் ஏறிய சிறுவன்.. மறுகணமே கட்டியணைத்து கொண்ட விமான பணிப்பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வப்போது இணையத்தில் ஏராளமான க்யூட் வீடியோக்கள் அதிகம் வைரலாகி பலரது மத்தியில் வெகுவாக லைக்குகளை அள்ளும்.

Advertising
>
Advertising

அப்படி வெளியாகும் வீடியோக்களில் சிலவற்றை பார்க்கும் போது, மீண்டும் மீண்டும் அதனை ரசித்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூட தோன்றலாம்.

அந்த வகையில், அழகான ஒரு நெகிழ வைக்கும் தருணம் தொடர்பான வீடியோ தான் தற்போது வெளியாகி, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

எமிரேட்ஸ் விமானத்தில், விமான பணிப்பெண்ணாக ஒருவர் பணியாற்றி வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான் விமானத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, ஐந்து வயது சிறுவன் உள்ளே நுழைகிறான். போர்டிங் பாஸ் எடுத்த அந்த சிறுவன், தனது பாஸ் போர்ட் மற்றும் போர்டிங் பாஸுடன் விமானத்திற்குள் நுழைகிறார்.

சிறுவனைக் கண்டதும் அங்கே நிற்கும் விமான பணிப்பெண் சிறுவனை வரவேற்றத்துடன் அவரை கட்டியணைக்கவும் செய்கிறார். வழக்கம் போல, அந்த சிறுவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் கூலாக ஏறி உள்ளே செல்லும் போது கேமராவை திரும்பி பார்த்து கையசைத்த படியும் கடந்து போகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இதற்கு காரணம், விமான பணிப்பெண்ணாக இருக்கும் பெண்ணின் மகன் தான் அந்த சிறுவன் என தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது மகனை வேற லெவலில் விமானத்தில் வரவேற்பதுடன் மட்டுமில்லாமல், அவரை கட்டியணைத்து வரவேற்கும் இந்த க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.


மேலும் பலரும் அந்த சிறுவனை அதிகம் பாராட்டி நிறைய லைக்குகளை இந்த வீடியோவுக்கு அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

 

சமீபத்தில் கூட, இதே போல கேபினட் குழுவை சேர்ந்த நபர் ஒருவர், பெண் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு அங்குமிங்குமாக விமானத்தில் நடந்திருந்த வீடியோவும் அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

MOTHER, SON, AIR HOSTESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்