"மறுபடியும் மொதல்ல இருந்தா?".. 'யூ-டர்ன் அடித்த உலக சுகாதார மையம்'.. அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

Advertising
Advertising

கடந்த ஏப்ரல் மாதம் இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திய கொரோனா வைரஸ் அமெரிக்காவின் பக்கம் திரும்பிய போது அங்கு பலருக்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை தரப்படும் என கூறப்பட்டது. இந்த மருந்து கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைத்ததாக கண்டறியப்பட்டதையடுத்து உலக அளவில் இந்த மருந்தினை உட்கொள்வதற்கு அனைத்து நாடுகளும் முயன்றனன. அமெரிக்க அதிபர் டிரம்ப்,  இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து அதிகம் தேவை என இந்தியாவிடம் கோரிக்கை வைத்தும், மிரட்டல் விடுத்தும்  அதிக அளவு பெற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் தானும் அந்த மருந்தை தினமும் உண்பதாகவும், உடல் நலமுடன் இருப்பதாகவும் அவரே அறிவித்தார்.

ஆனால் இந்த நிலையில்தான் உலக சுகாதார மையம் இதுபோன்ற மருந்துகளை உண்பதில் எச்சரிக்கை அவசியம் என்று கூறியது. அதன் பின்னர் லான்செட் மருத்துவ இதழின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த மருந்து பாதுகாப்பானது அல்ல என்றும் இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து பற்றிய பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பை ஏற்று பல நாடுகளும் இந்த மருந்து குறித்த ஆய்வினை நிறுத்தின.

இந்த நிலையில் மீண்டும் கொரோனா இறப்பு விகிதத்தை, ஆய்வு செய்ததை வைத்து உலக சுகாதார தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு மீண்டும் ஹைட்ராக்ஸிக்ஸிகுளோரோகுயினை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அனுமதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியோசஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை, நோய் தடுப்பு மற்றும் நோய் கண்டறியும் செயல்பாடுகளில் அறிவியல் கண்ணோட்டத்துடனும், தீர்வுகள் மற்றும் ஆதரவுடனும் உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்