முதல்ல ஒண்ணுமே தெரியல... தற்போது காட்டுத் தீ போல பரவும் கொரோனாவால்... திகைக்கும் நாடுகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத் தீ போல வேகமெடுக்கும் கொரோனாவால் அந்நாடுகளை சேர்ந்த மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் வேகம் காட்டவில்லை. இதனால் கொரோனா கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இப்போதோ காட்டுத்தீ போல அங்கு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. அங்கு 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஆப்பிரிக்க தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறியுள்ளன. ஆப்பிரிக்காவை பொறுத்தமட்டில் அந்த கண்டத்தின் 54 நாடுகளில் ஒன்றான லெசோதா தவிர அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 9,400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் பரிசோதனை வசதிகள் அவ்வளவாக இல்லை என்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளதாகவும், இதனால் உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சில நாடுகள் ஊரடங்குகளை தளர்த்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும், குடும்பங்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஆப்பிரிக்க நாடுகள் கூறியுள்ளன. இதையடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டதால், கடந்த ஒரவாரமாக கொரோனா வைரஸ் பாதிப்பு 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஆப்பிரிக்க நாடுகள், வூகானை போன்று கொரோனா வைரஸ் பரவல் மையமாக மாறி 1,90,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்