'இனி யாரும் வாய திறக்கக்கூடாது'!.. பஞ்ச்ஷீர் மாகாணத்தில் திடீர் திருப்பம்!.. தாலிபான்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களுக்கு எதிராக பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த பஞ்ச்ஷீர் மாகாணத்தில் இருந்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 15ம் தேதி தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து, 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தாலிபான்கள் தங்களது தலைமையில் நாட்டில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.
தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேவேளையில், ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்து வந்தது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தாலிபான்களுடன் சண்டையிட்டு வந்த நிலையில், பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தலைநகரை சுற்றியுள்ள மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாகவும், மாகாண தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாகவும் தாலிபான்கள் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் பஞ்ச்ஷீர் மாகாணத்தை விட்டு வெளியேறினால் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எதிர்ப்புக்குழுவின் தலைவர் அகமது மசூத் தெரிவித்திருந்தார்.
தாலிபான்களின் தாக்குதல் காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளதால், பஞ்ச்ஷிர் மாகாணத்தில் போர் நிறுத்தத்தத்தை ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படையினர் இன்று காலை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் எதிர்ப்புப் படையினரின் கடைசிப் பகுதியான பஞ்ச்ஷிர் மாகாணத்தை தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான புகைபடங்களில் தாலிபான் உறுப்பினர்கள் பஞ்ச்ஷிர் மாகாண ஆளுநர் வளாகத்தின் வாயிலின் முன் நிற்பதை தெரிவிக்கின்றன.
ஆனால், தாலிபான் படைகளை எதிர்க்கும் எதிர்க்கட்சி குழுவின் தலைவர் அகமது மசூதிடம் இருந்து, இந்த சம்பவம் தொடர்பாக எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மூணு பேர் 'துப்பாக்கி'யோட வீட்டுக்குள்ள வந்தாங்க... 'எல்லாரையும் கயிறு வச்சு கட்டி போட்டுட்டு'... 'எங்க கண்ணு முன்னாடியே...' - 'வார்த்தை'யால விவரிக்க முடியாத பயங்கரம்...!
- 'இவ்ளோ நாள் ஆகியும்... ஆட்சி அமைக்க முடியலயே'?.. உச்சகட்ட கடுப்பில் தாலிபான்கள்!.. ஆப்கனில் என்ன நடக்கிறது?
- 'புல்லட் வேஸ்ட் ஆகுதுயா...' ஏன் எதுக்கெடுத்தாலும் இப்படி பொசுக்குன்னு சுடுறீங்க...? பேசாம வீட்டுக்கு போய் 'அத' பண்ணுங்க...! - தாலிபான்களுக்கு அறிவுரை...!
- 'மரண பயத்த காட்டிடாங்க பரமா'!.. கொத்து கொத்தாக வீழும் தாலிபான்கள்!.. பஞ்ச்ஷீர் மாகாணத்தில் வெடித்தது மோதல்!
- ‘இதுதான் என் மண்ணு.. இங்கதான் இருப்பேன்’.. தனி ஆளாய் தாலிபான்களுக்கு ‘தண்ணி’ காட்டும் நபர்..!
- நாலஞ்சு தாலிபான்கள் என் ‘வீட்டுக்கு’ வந்தாங்க.. அப்போதான் தெரிஞ்சது அவங்க யாருன்னு.. பகீர் தகவலை வெளியிட்ட ‘பெண்’ நீதிபதி..!
- 'கொஞ்சம் கூட பயம் இல்ல!'.. 'நான் இப்படி தான் தலை நிமிர்ந்து வேலைக்கு போவேன்'!.. ஆப்கானில் மாஸாக ரீ என்ட்ரி கொடுத்த 'பெண் தொகுப்பாளர்'!
- 'இப்போ நல்லா குளுகுளுன்னு தான் இருக்கும்'... 'இனிமேல் தாலிபான்களுக்கு தூக்கமே வராது, அப்படி ஒரு பிரச்சனை வர போகுது'... மரணபயத்தை காட்டியுள்ள சம்பவம்!!
- தயவு செஞ்சு தாலிபான்களுக்கு 'சப்போர்ட்' பண்ணாதீங்கையா...! பழங்காலத்துக்கு போய் 'காட்டுமிராண்டி' போல வாழ போறீங்களா...? - கடுமையாக சாடிய 'பிரபல' நடிகர்...!
- சீனா பெருசா 'பிளான்' பண்ணிட்டாங்க...! 'இந்தியாவுக்கு தான் சரியான ஆப்பு...' என்ன நடக்க போகுதோ...? - 'பேரிடியாய்' வெளிவந்துள்ள 'அதிர' வைக்கும் தகவல்...!