விண்ணைப் பிளந்த மரண ஓலம்!.. துண்டாடப்பட்டது காபூல்!.. நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறும் அப்பாவி மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் எது நடக்கக் கூடாது என்று ஆப்கான் மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்களோ அந்த கோரம் நடத்தப்பட்டுவிட்டது.

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்திற்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று  பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று (25.8.2021) அறிவுறுத்தியது. அமெரிக்காவும், கடந்த இரண்டு நாட்களாக, இது போன்ற பல எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டே இருந்தது. 

ஏனெனில், காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறையிடமிருந்து 'மிகவும் உறுதியான' தகவல் கிடைத்திருந்தது.

இந்நிலையில், இன்று (26.8.2021) காபூல் விமான நிலையம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் பெண்டகன் அமைப்பு தெரிவித்துள்ளது. அதில், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் பலர் உடல் சிதறி பலியானதாக பதைபதைக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தின் நுழைவு வாயில் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தை அடைவதற்காக ஆப்கானியர்கள் கூட்டம் கூட்டமாக நுழைவாயிலில் குவிந்து வந்தனர்.

மேலும், தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 3 அமெரிக்க ராணுவத்தினரும், தாலிபான்களில் சிலரும் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நடுங்க வைக்கும் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பென்டகனின் பத்திரிகை செயலாளர் ஜான் கிர்பி, "தற்போதைய சூழலில் பலி எண்ணிக்கை எத்தனை என உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை" என்றார்.

 

 

எனினும், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 13 பேர் உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்