தாலிபான்கள் அச்சுறுத்தலை விட... மிகப்பெரும் துன்பத்தில் ஆப்கான் மக்கள்!.. மூடி மறைக்கப்பட்ட நரக வேதனை அம்பலம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உணவுப்பொருட்கள் வாங்க பணமின்றி மக்கள் தவித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷர்ஃப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இதற்கிடையே, தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க, நாட்டை விட்டு வெளியேற ஒரே வழி காபூல் விமான நிலையம் என்பதால், தலைநகரில் கடந்த 9 நாட்களாக பதற்றம் நீடித்து வருகிறது.
அதேசமயம், தாலிபான்களால் கைப்பற்றப்பட்டு 9 நாட்கள் ஆகியும், இன்னும் காபூலில் வங்கிகள், பள்ளிகள் மற்றும் பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதால் காபூலில் பெரும் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், அவை வேலை செய்யாததால் ஆப்கானில் உள்ள பலதரப்பட்ட மக்களும் உணவுப்பொருட்கள் வாங்க பணமின்றி தவித்து வருகின்றனர்.
இதன் விளைவாக, உணவு மற்றும் பிற பொருட்களின் விலைகள் பட மடங்கு உயர்ந்துள்ளன. இதுகுறித்து, "எங்களிடம் பணம் இல்லை. வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அவை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியாது" என்று காபூல் வாசி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஆப்கானை விட்டு கடைசி அமெரிக்க இராணுவ வீரர் வெளியேறிய பிறகு தான் புதிய அரசாங்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானில் உள்ள வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேற, ஆகஸ்ட் 31ம் தேதி வரை தலிபான்கள் காலக்கெடு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கேட்கும்போதே ஈரக்கொலை நடுங்குதே!.. ‘எங்க பஸ்ஸை திடீர்னு தாலிபான்கள் வழிமறிச்சிட்டாங்க’.. ஆப்கானில் சிக்கிய கேரள இளைஞரின் பதபதைக்க வைக்கும் அனுபவம்..!
- "அவங்க கொஞ்சம் கூட மாறல"!.. தாலிபான்களிடம் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய... மருத்துவ மாணவர் போட்டுடைத்த பகீர் தகவல்!
- VIDEO: 'டேய் இங்க வா... போன வச்சு என்ன பண்ணிட்டு இருக்க'?.. பேச பேச ஆப்கன் இளைஞரை... துப்பாக்கியால் தாக்கிய தாலிபான்!.. எதுக்கு தெரியுமா?
- 'நீங்க ரொம்ப யோக்கியமோ'?... 'ஆப்கான் மக்களை பார்த்து ஏன் நீலிக்கண்ணீர் வடிக்குறீங்க'... சீனாவின் பரபரப்பு குற்றச்சாட்டு!
- 'இந்த பருப்பு எங்க கிட்ட வேகாது'...'உங்களுக்கு டெட்லைன் ஆகஸ்ட் 31'... அமெரிக்காவுக்கு முதல் அடியை கொடுத்த 'தாலிபான்கள்'!
- 'வாய' மூடிட்டு இருக்காதீங்க... ப்ளீஸ்...! நீங்கலாம் எங்களுக்காக 'குரல்' கொடுப்பீங்களா...? - கண்ணீர் வடிக்கும் மனிதர்...!
- 'அடங்க மறுக்கும்' பஞ்ச்ஷிர் மாகாணத்தை பார்த்து... வாயடைத்துப் போன ஆப்கானிஸ்தான்!.. நினைத்ததை விட மிக ஆபத்தான தாலிபான்கள்!
- 'கண்ணுல கனவு... சாதிக்கணும்னு வெறி'!.. தாலிபான்கள் கண்ணில் மண்ணைத் தூவி... ஆப்கான் சிறுமிகளை போராடி மீட்ட அமெரிக்க தாய்!
- VIDEO: ‘இதுதான் நீங்க பயங்கரவாதத்துக்கு எதிரா போராடுன லட்சணமா?’.. 3 நிமிஷ வீடியோவில் அமெரிக்காவை பங்கமாய் ‘கலாய்த்த’ சீனா.. கிளம்பிய புது சர்ச்சை..!
- 'இத படிக்கும்போது நீங்க சந்தோசமா இருப்பீங்க'... 'ஆனா, என்னோட நிலைமை எந்த பொண்ணுக்கும் வர கூடாது'... இளம் பெண் விமானி சொன்ன அதிர்ச்சி தகவல்!