"அப்பா அம்மா ரெண்டுபேருமே இறந்துட்டாங்க".. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் நிர்கதியான சிறுமி.. உலகம் முழுவதும் இருந்து குவியும் உதவிகள்.. வைரல் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 1000 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கம்
கடந்த புதன்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் தரைமட்டமாகியிருக்கின்றன. இதனால் அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக குறைந்தபட்சம் 1000 பேர் மரணமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்த ஏராளமான மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தரைமட்டமான வீடுகள்
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ (27 மைல்) தொலைவில் 51 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும், வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.
நிர்கதியான சிறுமி
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சிறுமி ஒருவர் தனது தாய், தந்தை உள்ளிட்ட மொத்த குடும்பத்தினரையும் இழந்திருக்கிறார். சிறுமியின் அண்டை வீட்டில் வசித்துவந்தவர்கள் இதுகுறித்து பேசுகையில்," சிறுமியின் குடும்பத்தினர் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை" என்றனர். இந்நிலையில், முழுவதும் இடிந்த தனது வீட்டின் முன்புறம் நிற்கும் இந்த சிறுமியின் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி பரவியது.
உதவி
உறவினர்களை இழந்த சிறுமியின் புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் சிறுமிக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துவருகின்றனர். பலர் இந்த சிறுமியை தத்தெடுத்து வளர்க்க இருப்பதாகவும், சிறுமி தற்போது இருக்கும் இடத்தை கூறும்படியும் பதிவிட்டு வருகின்றனர்.
அரசியல் விமர்சகரான ரெஹம் கான்," இந்த சிறுமி எங்கே இருக்கிறார் என்று கூறுங்கள். நான் இச்சிறுமியை தங்கவைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்" எனக்குறிப்பிட்டுள்ளார். அவரை தொடர்ந்து ஒரு தம்பதி," இந்த புகைப்படம் எங்களது இதயத்தை சிதறடித்துவிட்டது. நாங்கள் இந்த சிறுமியை தத்தெடுத்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல், ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ஏராளாமான மக்கள் நிவாரண பொருட்களை அளிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், இந்த சிறுமியின் புகைப்படம் உலக அளவில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. தரைமட்டமான வீடுகள்.. சுமார் 255 பேர் உயிரிழப்பு..!
- "ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இப்போ இப்படி ஒரு நிலைமை".. வைரல் புகைப்படத்தின் கலங்கவைக்கும் பின்னணி..!
- ‘அதிகாலை கேட்ட பயங்கர சத்தம்’.. திண்டுக்கல் அருகே நிலநடுக்கமா..? வீடுகளில் விழுந்த விரிசல்.. பீதியில் மக்கள்..!
- இவருக்கா இந்த நிலைமை..! ஒரு வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்த மனுசன்.. வாழ்க்கை இப்படி தலைகீழா மாறிடுச்சே..!
- ஜப்பானை தொடர்ந்து இந்தியாவிலும் இரவு நிலநடுக்கம்.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..!
- ‘அதே மாதம்.. அதே இடம்’.. 11 வருசத்துக்கு அப்புறம் மறுபடியும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுத்த நாடு..!
- ஆஸ்திரேலியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்! யார் இந்த நிவேதன் ராதாகிருஷ்ணன்?
- ஆப்கானிஸ்தானிடம் அகதியாக அடைக்கலம் கேட்கும் நியூசிலாந்து கர்ப்பிணி பெண் ரிப்போர்டர்.. பின்னணியில் இப்படி ஒரு காரணம்
- VIDEO: குலுங்கிய கேமரா.. ‘ஆமா இது நிலநடுக்கம் தான்’.. U19 உலகக்கோப்பையில் நடந்த ‘ஷாக்’.. Live-ல் பதறிய கமெண்ட்டேட்டர்..!
- சென்னையில கரெக்ட்டா 8.15 மணிக்கு .. டோங்கா கடலில் எரிமலை வெடித்ததை அடுத்து... வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்!