'அங்கு 80% பேருக்கு கொரோனா இருக்கலாம்'... உலகிலேயே 'அதிக' பாதிப்புள்ள நாடுகளில் ஒன்றாக வாய்ப்பு... சர்வதேச அமைப்பு 'அச்சம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாமென அஞ்சப்படுவதாக குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இதுவரை 3,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் காபூலில் 500 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 50 சதவீதம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருக்கலாமென அஞ்சப்படுகிறது.
இதுபற்றிப் பேசியுள்ள குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப், "ஜனவரி முதல் ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து திரும்பிய சுமார் 2,71,000 பேருக்கு அடிப்படை வசதி வழங்க ஆப்கானிதான் போராடி வரும் நிலையில், அங்குள்ள சமூக-பொருளாதார நிலை காரணமாக நாட்டு மக்கள் ஈரான் மற்றும் அருகிலுள்ள மற்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து வாழ முடியாது. மேலும் உள்நாட்டுப் போர் காரணமாக நாட்டின் 30 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
ஆப்கானிஸ்தானில் 8 பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒரு நாளில் 100 முதல் 150 பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. போதியளவு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாதது, வசதிகள் இல்லாதது, குறைவான தனிமனித ஆயுட்காலம் (50 ஆண்டுகள்) ஆகியவற்றுடன் பெரும்பாலானோர் காசநோய், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நிலைமைகளுடன் பிறந்துள்ளனர். கூடுதலாக சுற்றுச்சூழல் மாசுபாடு ஆபத்தும் உள்ளது.
ஒரு குடும்பத்தில் சராசரியாக ஏழு பேர் உள்ள நிலையில் அவர்கள் சிறிய அறைகளிலேயே தங்கியுள்ளனர். சில நாட்களுக்கு மேல் வீடுகளுக்குள் முடங்கி இருக்க அவர்களுடைய சமூக பொருளாதார நிலை இடமளிப்பதில்லை. வெளியில் சென்றாக வேண்டிய கட்டாயத்தால் தனிமனித இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்தல் ஆகியவை அங்கு சாத்தியமில்லை. இதுபோன்ற காரணங்களால் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடாக ஆப்கானிஸ்தான் இருக்க வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகம்: சென்னையில் 'முதல்வர் பழனிசாமி' இல்லத்தில் 'பாதுகாப்பு பணியில்' ஈடுபட்டு வந்த 'பெண் காவலருக்கு கொரோனா'?
- ‘கொரோனா அச்சத்திற்கு இடையே’... ‘மக்களை அதிர வைத்த சம்பவம்’... ‘ உறைய வைக்கும் வீடியோ!
- 'போர் மூளும் அபாயம்!'.. அறிக்கையை சமர்பித்த சீன அதிகாரிகள்... அதிர்ந்து போன அதிபர் ஜின்பிங்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'எப்போது பொது போக்குவரத்து தொடங்கப்படும்?’... ‘மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த புதிய தகவல்’!
- தமிழகத்தை உலுக்கும் கொரோனா!.. ஒரே நாளில் 771 பேருக்கு நோய் தொற்று!.. என்ன நடக்கிறது தமிழகத்தில்?
- ‘இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் நிலை என்ன?’... ‘பிரதமர் தலைமையில் ஆய்வு’... ‘வெளியான முக்கிய தகவல்’!
- 'பச்சை மண்டலத்துக்கு முன்னேறிய தமிழக மாவட்டம்'... '24 நாட்களுக்குப் பின் திரும்பவும் பாதிப்பு'... வெளியான கொரோனா பரவல் பின்னணி!
- 'சென்னையில் 300-ஐ தாண்டிய 3 பகுதிகள்'... 'கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் 357 ஆக உயர்வு'... 'ஆண்கள், பெண்கள் பாதிப்பு விபரம்'!
- 'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...
- 'உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம்'... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...