புள்ள குட்டிங்க 'பசியால' துடிக்குது... 'பார்க்க வேதனையா இருக்கு, அதான்...' நாங்க வேற என்ன பண்றது...? - கண்ணீரோடு 'ஆப்கான்' மக்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. தற்போது தாலிபான்கள் ஆட்சியைவிட அங்கு நிலவி வரும் வறட்சி மற்றும் பொருளாதார சரிவு உலக மக்களை கவலையடைய செய்துள்ளது.
உணவுப் பொருட்கள் இந்த மாதம் தீர்ந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில், அங்கு பலர் பட்டினியுடன் இருந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் விவசாய உற்பத்தி சார்ந்தே அங்கே பொருளாதாரம் உள்ளது. கடந்த சில வருடங்களாக அங்கு நிலவி வரும் வறட்சியால் விவசாயம் என்பது இல்லாமல் போய்விட்டது. கொரோனா மற்றும் உள்நாட்டு போர் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் அடிமட்டத்துக்கு போய்விட்டது.
தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, சீனா மற்றும் ரஷ்யாவின் நிதி உதவியையே வருங்காலத்தில் தங்களின் நாட்டை மீள் கட்டமைக்க பெரும்பாலும் உதவும் என தெரிவித்திருந்தார். ஆனால், ரஷ்யாவும், சீனாவும் இது குறித்து வாய் திறக்கவில்லை.
மேலும், ஆப்கானிஸ்தானில் இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டில் சுமார் 97% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே செல்லும் அபாயம் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும், ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக 600 மில்லியன் டாலர் அளவில் நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்து வரும் கடுமையான பஞ்சநிலை காரணமாக தற்போது ஆப்கான் மக்கள் தங்களின் உடைமைகளை விற்கத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டிற்கு வெளியிலேயே சிறிய கடைகளை அமைத்து தங்கள் உடைமைகளை சிறிய தொகைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர்.
அதோடு, இந்தியாவும் ஆப்கானியர்களுக்கு உறுதுணையாக இருக்க தயார் எனவும், அனைத்து பிரிவினருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நெஞ்சுல ரணம், கண்ணுல கண்ணீரோட...' வெளியான 'ஆப்கான் சாட்டிலைட்' புகைப்படம்...! - எதிரிக்கு கூட 'இப்படி' ஒரு நிலைமை வரக் கூடாது...!
- 'எங்கள கைவிட்றாதீங்க ப்ளீஸ்'!.. இழுத்து மூடும் அபாயத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி!.. ஆஸ்திரேலியாவிடம் மன்றாடும் ஆப்கான் கிரிக்கெட் வாரியம்!
- 'இத ரொம்ப ஈஸியா நினைக்காதீங்க'!.. உலக அரசியல் கணக்குகளை மாற்றிவரும் தாலிபான்கள்!.. ஆப்கான் குறித்து 'ஷாக்' அடிக்கும் தகவல்!
- ‘என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல’!.. டி20 உலகக்கோப்பைக்கான ஆப்கான் அணியை அறிவித்த ‘20 நிமிடத்தில்’ ரஷீத் கான் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!
- 'அடேங்கப்பா!.. பெண்கள் மீது என்ன ஒரு கரிசனம்'!.. 'பாவப்பட்டு பேசுவது போல்... பெண்களை மிக மோசமாக மட்டம் தட்டிய தாலிபான்கள்'!.. பூதாகரமான சர்ச்சை!
- 'பொண்ணுங்கள விளையாட விட்டா... 'அந்த' சிக்கல் வரும்'!.. சர்ச்சையான கருத்தைக் கூறி... கேவலப்பட்டுப் போன தாலிபான்கள்!
- 'புலி பதுங்கி இருந்தது பாயுறதுக்கு டா'!.. மந்திரி சபை அறிவிப்பு வெளியானதும்... தாலிபான்களை நிலைகுலைய வைத்த அகமது மசூத்!
- என்னமோ 'காய்கறி' வாங்கிட்டு போறமாதிரில போறாங்க...! - 'கந்தஹார்' மாகாணத்தில் இருந்து வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' தகவல்...!
- 'கருத்து சுதந்திரமாவது... மண்ணாங்கட்டியாவது'!.. மந்திரி சபை லிஸ்ட் ரெடியானதும்... தாலிபான்கள் அட்டூழியம்!.. பரிதாபமான நிலையில் 5 பத்திரிகையாளர்கள்!
- ஐயோ 'அவரா' உள்துறை அமைச்சர்...!? ஒருகாலத்துல 'என்னெல்லாம்' பண்ணிருக்காரு...! '2008-ல் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு...' - 'அதிர' வைக்கும் பல தகவல்கள்...!