'இதெல்லாம்' எதுக்கு...? 'ஒரு யூஸும் கிடையாது...' 'இப்போ எங்களையே பாருங்க...' எவ்ளோ 'கெத்தா' இருக்கோம்...? - தாலிபான் அமைச்சர் வெளியிட்ட 'சர்ச்சை' கருத்து...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானில் புதிய கல்வித்துறை அமைச்சர் ஷேக் மவுல்வி நூரல்லா வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானில் தாலிபான் ஆட்சி அமையவிருக்கும் நிலையில், 33 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்து, அதில் பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதோடு, தாலிபான் தலைவர் முல்லா ஹசன் அகுண்ட் வெளியிட்ட முதல் அறிக்கையில், எதிர்காலத்தில் அரசு நிர்வாகம் மற்றும் வாழ்க்கை முறை ஷரியத் சட்டத்தின்படி ஒழுங்கு படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்

இந்நிலையில், ஆப்கானின் புதிய கல்வி அமைச்சராக அறிவிக்கப்பட்ட ஷேக் மவுல்வி நூருல்லா முனீர் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்ன கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், 'இன்றைய காலகட்டத்தில் பிஎச்டி, எம்.பில் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு மதிப்பில்லை. இங்கு ஆப்கானில் ஆட்சியை அமைக்கவிருக்கும் முல்லாக்கள், தாலிபான்களிடம் எந்த பட்டமும் இல்லை.

ஏன் பலரும் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்கினது இல்லை. ஆனால், நாங்கள் தான் தற்போது ஆப்கானில் ஆட்சி அமைத்துள்ளோம்' எனக் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்