'எங்க வாரிசாவது நல்லா இருக்கட்டும்'... 'கதறியபடி குழந்தையை கொடுத்த பெற்றோர்'... 'ஆனா உண்மையில் என்ன நடந்தது தெரியுமா'?... அமெரிக்க ராணுவம் வெளியிட்ட புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றும் எண்ணத்தில் ஆப்கான் பெற்றோர் குழந்தைகளை அமெரிக்க ராணுவ வீரர்களிடம் கொடுத்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைக் தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிய அடுத்த நொடியிலிருந்து ஏராளமானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விமானநிலையத்தை முற்றுகையிட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல அனைவராலும் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியவில்லை.

இதனால் தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்வேலியைத் தாண்டி தங்கள் குழந்தைகளை மறு பக்கம் நின்றிருந்த அமெரிக்க இராணுவ வீரர்களிடம் கொடுத்தனர். இந்த செய்தி வைரலான நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவ்வாறு மூன்று குழந்தைகள் வரை அப்படிக் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

அப்படிக் கொடுக்கப்பட்ட ஒரு குழந்தையை அமெரிக்க வீரர் ஒருவர் வாங்கி தன் சக வீரரிடம் கொடுக்கும் காட்சி அடங்கிய வீடியோ வெளியானது. இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். அதில், '' ராணுவ வீரரிடம் கொடுக்கப்பட்ட குழந்தை பெண் குழந்தையாகும். அந்த குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாலேயே அது அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது'' என விளக்கமளித்துள்ளார் Major Jim Stenger.

மேலும் ''விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கபட்டபின், மீண்டும் அந்த குழந்தை அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது அந்த குழந்தையும் அதன் பெற்றோர்களும் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை'' என பென்டகன் செய்தித்தொடர்பாளரான John Kirby தெளிவுபடுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்