நான் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்! 'இனி அவளுக்கு பிடிச்ச பாட்டுக்கு டான்ஸ் ஆடுவா..' கண்ணீருடன் தாய் உருக்கம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: மரபணு ரீதியான நோயால் பாதிக்கப்பட்டிருந்த யூடியூபர் அடாலியா ரோஸ் வில்லியம்ஸ் தனது 15-ம் வயதில் காலமானார்.
நான் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்
அவர் மூன்று வயதாக இருக்கும்போதே 'ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் புரோஜீரியா (Hutchinson-Gilford progeria syndrome) என்ற முதுமை தோற்றமளிக்கும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 15 வயதான அவர் தனது முகநூல் பதிவில் 'நான் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்' என பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேஸ்புக் பதிவை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் மேற்பட்ட லைக் செய்துள்ளனர். உலகெங்கிலும் இருந்தும் ஏராளமான இரங்கல் கமெண்டில் குவிகிறது.
இனிமேல் அவள் விரும்பிய பாடல்களுக்கு அவளால் டான்ஸ் ஆட முடியும்:
அவருடைய குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில் ''அமைதியாகவே வந்தாள், அமைதியாகவே போய்விட்டாள். ஆயினும், பல கோடி மக்களின் மனதில் நின்று விட்டாள். அவளுக்கு இனி எந்த வலிகளும் கிடையாது. இனி அவள் விரும்பிய பாடல்களுக்கு அவளால் டான்ஸ் ஆட முடியும்'' என கூறியுள்ளனர்.
ரோஸ் வில்லியம்ஸ் மூன்று வயதாக இருக்கும்போது, முதுமையை வெளிப்படுத்தும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 13 ஆண்டுகள் மட்டுமே அவரது ஆயுட்காலம் என மருத்துவர்கள் கூறி விட்டனர் என 2018-ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் அவருடைய அம்மா கூறியிருந்தார்.
உடலில் ஏற்பட்ட மாற்றம்:
"அடாலியா பிறந்தபோது, பிறந்து ஒருமாதம் ஆன குழந்தையை போன்று காணப்பட்டார். மருத்துவர்கள். அவளது வளர்ச்சியில் அதிருப்தி அடைந்தனர். இது முதலில் தோன்றிய அறிகுறிகளில் ஒன்றாகும், அதன் பிறகு அவளது வயிற்றில் உள்ள தோல் மிகவும் இறுக்கமாக இருந்தது, வித்தியாசமான தோற்றமாகவும் இருந்தது,” என்று அவரது அம்மா தெரிவித்துள்ளார்.
ஃபேஷன் மற்றும் மேக்-அப் பயிற்சிகள்:
டெக்ஸாசில் பிறந்த அடாலியா ரோஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் யூடியூப்பில் பல வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அவர் தனது உடல்நலன் தொடங்கி ஃபேஷன் மற்றும் மேக்-அப் பயிற்சிகள் வரை அனைத்தையும் பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்களிற்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் அதிகரித்தனர்.
யூடியூப்பில் மட்டும் அவருக்கு 2.91 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாகிராமில் 379,000 க்கும் அதிகமான பாலோவர்ஸ்களும் இருக்கின்றனர். இவரது மறைவு அவரை பின்தொடர்பவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏன் சார் 'டல்லா' இருக்கீங்கனு வந்து கேட்பியே டா! பேரிடியாக விழுந்த மாணவனின் மரணம், உருக வைக்கும் ஆசிரியரின் பதிவு
- இதுக்கு முன்னால 'யாரெல்லாம்' ஹெலிகாப்டர் விபத்துல இறந்துருக்காங்க...? - முழு விபரம்...!
- 'அது' நடக்குற வரைக்கும்... 'என் வேலை இது தான்...' 'சாதிக்க துடிக்கும் பெண்...' - விஷயத்தை கேள்விப்பட்ட உடனே 'யூடியூபர்' செய்த நெகிழ வைக்கும் காரியம்...!
- "ஒருத்தரும் தப்பிக்க முடியாது!".. அடுத்த அதிரடி!.. மதன் ரசிகர்களுக்கும் செக்!.. Beast மோடில் சென்னை சைபர்கிரைம்!
- பப்ஜி மதனின் பாலியல் அத்துமீறல்கள்!.. இ-மெயில் மூலம் கசிந்த ரகசியம்!.. சென்னை சைபர்கிரைம் போலீஸ் திடுக்கிடும் தகவல்!
- 'பில்டப் பண்ணு... பேமண்ட் வாங்கு'!.. 'பப்ஜி' கேமில்... கதை, திரைக்கதை, வசனத்தோடு... பல 'டிராமா'க்களை அரங்கேற்றிய 'மதன்'!.. திடுக்கிடும் தகவல்!
- 'பப்ஜி' மதன் கைது!.. 'குவியும் புகார்களால்... கூடிக்கொண்டே போகும் சிக்கல்!.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'பப்ஜி' மதனின் தோழிகளுக்கும் ஸ்கெட்ச்!.. 'கூண்டோடு காலி ஆகிறது 'Madan OP' சாம்ராஜ்யம்'!.. காவல்துறை தீவிரம்!
- 'யூடியூபர் மதன்... முன் ஜாமின் கோரி மனு தாக்கல்'!.. 'வழக்கறிஞரை வறுத்தெடுத்த நீதிபதி'!.. உயர் நீதிமன்றத்தில் தெறி சம்பவம்!!
- 'யூடியூப் மூலம்... மோசடி செய்த பணத்தை... Hi-Tech Level-ல் லாவகமாக பயன்படுத்திய கில்லாடி மதன்'!.. அதிர்ந்து போன காவல்துறை!