அதிவேகத்தில் 'மோதிவிட்டு' நிற்காமல் சென்ற 'கார்'... துரத்திச் சென்று பார்த்தபோது... 'ஒட்டுநர்' இருக்கையில் இருந்த 'நாய்'... 'அதிரவைக்கும்' சம்பவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் நாய்க்கு கார் ஓட்ட பயிற்சி அளித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் உள்ள ஒரு சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கார் ஒன்று அதிவேகத்தில் சென்றுள்ளது. அப்போது அந்தக் கார் முன்னால் சென்ற 2 கார்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்ல, இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டி சென்ற போலீசார் அந்த காரை சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர். அதன்பிறகு அந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது, ஓட்டுனர் இருக்கையில் நாய் ஒன்று அமர்ந்திருப்பதைப் பார்த்து போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.

மேலும் ஓட்டுநர்  இருக்கையின் அருகே இருந்த இருக்கையில் இளைஞர் ஒருவர் இருந்துள்ளார். அதன்பிறகு போலீசார் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவர் தனது நாய்க்கு கார் ஓட்ட பயிற்சி அளித்ததாக கூறி போலீசாருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து  அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ACCIDENT, US, CAR, DOG, DRIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்