‘நொடிப்பொழுதில்’.. ‘2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்’.. ‘16 பேர் பலி; 60 பேர் காயம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வங்கதேசத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வங்கதேசத்தின் பிரம்மான்பாரியா மாவட்டத்தில் உள்ள மண்டோபாக் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை சிட்டகாங் நோக்கி உதயன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது டாக்கா ரகரில் இருந்து எதிரே மற்றொரு ரயில் வந்துகொண்டிருந்துள்ளது. நொடிப்பொழுதில் இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே 10க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் ஆகியோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுநர் சிக்னலைக் கவனிக்காமல் சென்றதே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BANGLADESH, TRAIN, ACCIDENT, COLLISION, DEAD, INJURED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்