‘இதுதான் கூரையப் பிச்சிக்கிட்டு கொடுக்கறதோ’! ‘ஓவர் நைட்டில் கோடீஸ்வரன்’!.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அபுதாபி பிக் டிக்கட் லாட்டரி குலுக்கலில் இந்தியர் ஒருவருக்கு சுமார் 29 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி (Abu Dhabi BigTicket draw) என்பது பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் டிக்கெட் வாங்கிய இந்தியர்கள் பலர் கோடிகளை அள்ளியுள்ளனர். கடந்த மாதம் மங்களூரைச் சேந்த முகமது என்பவருக்கு இதே லாட்டரியில் சுமார் 23 கோடி ரூபாய் விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் இந்தியர் ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்பவருக்கு பரிசு விழுந்துள்ளது.

கேரளா மாநிலத்தை சேர்ந்த அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் லாட்டரியில் அவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 29 கோடி ரூபாய். இதனை அடுத்து லாட்டரி நிறுவனம் இவரை தொடர்பு கொண்டுள்ளது. ஆனால் அவர் குறிப்பிட்ட  நம்பருக்கு அழைத்தால் வேறொரு நபருக்கு சென்றுள்ளது. பின்னர் அவர் கொடுத்த மற்றொரு எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஒருவழியாக அந்த இளைஞரை கண்டுபிடித்துள்ளனர்.

KERALA, ABUDHABI, BIGTICKET, YOUTH, WON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்