இங்கிலாந்து ராணியின் பாதுகாப்பு படையில் இருந்து எஸ்கேப் ஆன வீரர்.."அத மட்டும் அவர் செஞ்சா அவ்ளோதான்".. கவலையில் பிரிட்டன்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நேட்டோ அமைப்புடன் இணையும் உக்ரைனின் கருத்தை தொடர்ந்து எதிர்த்துவந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கனவே எச்சரித்து இருந்தார்.

Advertising
>
Advertising

கொரோனா பாஸிட்டிவ்.. 549 நாள் ட்ரீட்மெண்ட் முடித்து வீடு திரும்பிய நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!

உதவி

ரஷ்யாவின் போர் முடிவிற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணையவேண்டும் என கோரிக்கை வைத்த உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலன்ஸ்கி, பிற நாடுகளில் இருந்து உக்ரைனுக்கு ஆதரவாக போர் பெரிய முன்வருபவர்களுக்கு உடனடி விசா வழங்கப்படும் என அறிவித்தார். அது மட்டுமல்லாமல் ராணுவத்திற்கு உதவி செய்ய விரும்பும் பொது மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.

வீரரை காணவில்லை

இந்நிலையில், இங்கிலாந்து ராணியின் பாதுகாப்புப் படையான Windsor barracks-ல் பணிபுரிந்து வந்த 19 வயது வீரர் ஒருவர் தப்பித்து இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவர், போலந்திற்கு செல்ல டிக்கெட் எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது பெற்றோருக்கு கடிதம் எழுதிவிட்டு தப்பித்த அந்த வீரர் உக்ரைன் போரில் பங்கேற்க சென்று இருக்கலாம் என அச்சத்தில் இருக்கிறது பிரிட்டன்.

பகை

நேட்டோ அமைப்பில் இன்னும் இணையாததால் ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்க இயலாது என நேட்டோ கூட்டமைப்பு பின்வாங்கியது. இந்நிலையில், ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்தது மட்டுமல்லாமல், உக்ரைனுக்கு நேரடி மற்றும் மறைமுக உதவிகளை இங்கிலாந்து அரசு செய்து வருகிறது. ஒருவேளை இங்கிலாந்து வீரர் உக்ரைன் யுத்தகளத்தில் ஈடுபடும் போது, ரஷ்ய படைகளை எதிர்கொள்ள வேண்டிவந்தால் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதே பிரிட்டனின் கவலையாக இருக்கிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை இங்கிலாந்து எதிர்ப்பதாக ரஷ்ய ராணுவம் நினைத்துவிட்டால், மிகப்பெரிய ஆபத்துகளை அது உண்டாக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ராணுவ உயர் அதிகாரிகள். இதனால், உடனடியாக அந்த வீரரை இங்கிலாந்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, பல இங்கிலாந்து வீரர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 19 வயது இங்கிலாந்து வீரர் ஒருவர் உக்ரைனுக்கு செல்கிறார் என்ற தகவல் வெளியாகி இருப்பது இங்கிலாந்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

கதறி கதறி அழுத சுட்டி குழந்தை....நொடியில் போட்ட குத்தாட்டம்! அம்மா செய்த வைரல் காரியம்.. Cute வீடியோ..!

UK, UK SOLDIER, UKRAINE, TRAVEL, BRITISH ARMY, நேட்டோ அமைப்பு, இங்கிலாந்து ராணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்